Home Loans | இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த பணவியல் கொள்கை மதிப்பாய்வு கூட்டத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக வட்டி விகிதங்களை சீராக வைத்துள்ளது.
இதன் விளைவாக, குறைந்த வீட்டுக் கட்டணங்களுக்கான தேடல் தொடர்கிறது. இந்த நிலையில், 20 வருட கால அவகாசத்துடன் ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கு 9.4 சதவீதத்திற்கும் குறைவான வட்டி விகிதங்களைத் தொடர்ந்து வழங்கும் 15 வங்கிகளின் படடியல் இங்கே உள்ளன.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
8.35 சதவீதத்தில் தொடங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வழங்கும் வீட்டுக் கடன் வட்டி விகிதம் மலிவானது. 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ ரூ.63,900 ஆக இருக்கும்.
இந்தியன் வங்கி
பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவை 8.4 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கின்றன. 20 ஆண்டு கால அவகாசத்துடன் ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ ரூ.64,200 ஆக உள்ளது.
கனரா வங்கி
கனரா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து வசூலிக்கின்றன. 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ ரூ.64,650 ஆக இருக்கும்.
கோடக் மகிந்திரா வங்கி
கோடக் மஹிந்திரா வங்கி 8.7 சதவீத வட்டியை வசூலிக்கிறது. 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ ரூ.65,550 ஆக இருக்கும்.
ஆக்ஸிஸ் வங்கி
8.75 சதவீதத்தில் தொடங்கி, ஆக்சிஸ் வங்கி, மலிவான வீட்டுக் கடன் திட்டங்களை வழங்கும் முதல் 15 வங்கிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ ரூ.65,775 ஆக இருக்கும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை 9 சதவீதத்திலிருந்து வசூலிக்கிறது. 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ ரூ.66,975 ஆக இருக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 9.15 சதவீதத்திலிருந்து வசூலிக்கிறது. 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ ரூ.67,725 ஆக இருக்கும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC) 9.4 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது. 20 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.75 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.68,850 ஆக இருக்கும்.
யெஸ் வங்கி
யெஸ் வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை 9.4 சதவீதத்திலிருந்து வசூலிக்கிறது. 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ ரூ.68,850 ஆக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“