Mutual Fund | கடந்த 5 ஆண்டுகளில், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன. இதில், பல்வேறு விருப்பத் தேர்வுகள் உள்ளன.
இதனால், சிறப்பாக செயல்பட்ட நிதிகளைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. இதற்கிடையில், முதலீட்டாளர்கள் சந்தை சராசரியை தாண்டிய பரஸ்பர நிதி திட்டங்களை அதிகளவில் நாடுகின்றனர்.
அந்த வகையில்,இந்தியாவில் சிறப்பாகச் செயல்படும் மியூச்சுவல் ஃபண்டுகளின் பட்டியல் இங்கே உள்ளன.
மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்
கடந்த மூன்று ஆண்டுகளில், பல்வேறு சந்தைப் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பல பரஸ்பர நிதிகள் ஈர்க்கக்கூடிய வருமானத்தை வழங்கியுள்ளன.
இது தொடர்பான தரவுகளின்படி, லார்ஜ் கேப் பிரிவில், நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் நேரடியாக 25.38% மூன்று ஆண்டு வருமானத்துடன் முன்னணியில் உள்ளது.
அதைத் தொடர்ந்து, ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் 21.82%, ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட் 21.74% ஆகவும், ஜே.ம். (JM) லார்ஜ் கேப் ஃபண்ட் 21.29% மற்றும் இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட் 20.29% ஆகவும் உள்ளன.
மிட் கேப் ஃபண்டு திட்டங்கள் ரிட்டன்
மிட்-கேப் ஃபண்டுகளுக்குத் திரும்பினால், க்வாண்ட் மிட் கேப் ஃபண்ட் 32.99% நேரடி மூன்று வருட வருமானத்துடன் முதலிடம் வகிக்கிறது. மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் 27.69%, மஹிந்திரா மானுலைஃப் மிட் கேப் ஃபண்ட் 26.77%, பிஜிஐஎம் இந்தியா மிட்கேப் ஆபர் நிதி 26.61%, மற்றும் எடல்வெசிஸ் மிட் கேப் ஃபண்டு (Edelweiss Mid Cap Fund) 26.35% ஆக உள்ளன.
ஸ்மால் கேப் பிரிவில், குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 37.81% நேரடி மூன்று ஆண்டு வருமானத்துடன் தனித்து நிற்கிறது. அதைத் தொடர்ந்து பாங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 32.18%, நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 30.47%, எடெல்வீஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் 29.45%, கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் 28.66% ஆகியவை வருகின்றன.
லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்
- நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட்- 25.38%
- ஹெச்.டி.எஃப்.சி (HDFC) டாப் 100 ஃபண்ட்- 21.82%
- ஐசிஐசிஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட்- 21.74%
- ஜேஎம் லார்ஜ் கேப் ஃபண்ட்- 21.29%
- இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட்- 20.29%
ஐந்து மிட் கேப் ஃபண்டுகள்
- குவாண்ட் மிட் கேப் ஃபண்ட் - 32.99%
- மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்-27.69%
- மஹிந்திரா மேனுலைஃப் மிட் கேப் ஃபண்ட்- 26.77%
- பிஜிஐஎம் இந்தியா மிட்கேப் வாய்ப்புகள் நிதி- 26.61%
- எடெல்விசிஸ் மிட் கேப் ஃபண்டு - 26.35%
மிட்கேப் ஃபண்டுகள்
- குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்- 37.81%
- பாங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்- 32.18%
- நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்-30.47%
- எடெல்வெஸிஸ் ஸ்மால் கேப் ஃபணடு - 29.45%
- கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட்- 28.66%
பல்வேறு வகைகளில் உள்ள 15 பரஸ்பர நிதிகள் குறித்த தகவல்கள் இங்கு உள்ளன. மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“