highest Fixed deposits rates | ஹெச்.டி.எஃப்.சி வங்கி மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 7.75 சதவீத வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது. 2020 மே 18ஆம் தேதியோடு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் நவ.7ஆம் தேதி 2023 நிறைவு பெற்றது. இந்த நிலையில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
5 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கு முன் எஃப்டியை முன்கூட்டியே மூடினால், முன்பதிவு செய்த டெபாசிட் தேதியில் உள்ள விகிதத்தை விட, வங்கியில் டெபாசிட் இருந்த காலகட்டத்திற்கு, வட்டி விகிதம் 1.00 சதவீதம் குறைவாக இருக்கும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 2.8% முதல் 7.40% வரை வட்டி வழங்குகிறது. 444 நாள்களில் முதிர்ச்சியடையும் கால வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 3% முதல் 7.10% வரை எஃப்.டி வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 3.5% முதல் 7.6% வரை மாறுபடும். இந்த விகிதங்கள் கடைசியாக 15 பிப்ரவரி 2023 அன்று திருத்தப்பட்டன.
டிசிபி வங்கி
டிசிபி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (DCB) பொது வாடிக்கையாளர்களுக்கு 3.75% முதல் 7.9% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.25% முதல் 8.50% வரையிலும் வட்டி வழங்குகிறது. இந்த விகிதங்கள் 27 செப்டம்பர் 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வழக்கமான நுகர்வோருக்கு, 4.5% முதல் 9% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் ஏழு நாள்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.5% முதல் 9.5% வரை வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“