latest Fixed Deposits interest rates | அனைத்து வங்கி வகைகளிலும், சிறு நிதி வங்கிகள் நிலையான வைப்புகளுக்கு (FDs) அதிக வட்டியை வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளில், பஞ்சாப் & சிந்து வங்கி டெர்ம் டெபாசிட்டுகளில் சிறந்த வருமானத்தை அளிக்கிறது.
மூத்த குடிமக்கள் வழக்கமாக நிலையான வைப்பு விகிதங்களை விட 50 bps அல்லது அதற்கு மேற்பட்ட கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். ஸ்மால் வங்கிகளில் பல்வேறு வங்கிகள் 9 சதவீதத்துக்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
1) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
சாதாரண மக்களுக்கு வங்கி 4.5% முதல் 9% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் ஏழு நாள்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.5% முதல் 9.5% வரை வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். இந்தப் புதிய வட்டி விகிதங்கள் அக்.9ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. 1001 நாள்கள் எஃப்.டி.களுக்கு அதிகபட்சமாக வட்டி விகிதம் 9% வழங்கப்படுகிறது.
2) சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
சூரயோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு 4 முதல் 8.6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே மூத்தக் குடிமக்களுக்கு 4.5 சதவீதம் முதல் 9.1 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஆக.7,2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
3) டிசிபி வங்கி
டிசிபி (DCB) வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 3.75% முதல் 7.9% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.25% முதல் 8.50% வரையிலும் வட்டி வழங்குகிறது. செப்.27, 2023 முதல் இந்தப் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன.
4) ஐடிஎஃப்சி வங்கி
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பொது வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகைக்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மறுபுறம், மூத்த குடிமக்களுக்கு, வங்கி 4 முதல் 8.25% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
5) ஆர்.பி.எல் வங்கி
பொது வாடிக்கையாளர்கள் நிலையான வைப்புத்தொகைகளுக்கு 3.50% முதல் 7.80% வரை வட்டி பெறுகிறார்கள், மூத்த குடிமக்கள் கால வைப்புத்தொகையில் 4% முதல் 8.30% வரை பெறுகிறார்கள். அக்.16,2023 முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன.
பொதுத்துறை வங்கிகள்
1) ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 3% முதல் 7.10% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 3.5% முதல் 7.6% வரை மாறுபடும். இந்த விகிதங்கள் பிப்.15, 2023 அன்றே திருத்தப்பட்டு விட்டன.
2) பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
பொது வாடிக்கையாளர்களுக்கு 2.8% முதல் 7.40% வரை வட்டி கிடைக்கும். 444 நாட்களில் முதிர்ச்சியடையும் கால வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் அக்.1ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்துள்ளன.
தனியார் வங்கிகள்
1) ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி எஃப்.டி.க்கள் வெவ்வேறு காலங்களுக்கு 3% முதல் 7.20% வரை வட்டி விகிதத்துடன் வருகின்றன. மறுபுறம், மூத்த குடிமக்கள் 3.5% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களைப் பெறுகிறார்கள். இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 1, 2023 முதல் பொருந்தும்.
2)ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 3% முதல் 7.1% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மறுபுறம், மூத்த குடிமக்கள் எஃப்.டி.க்களுக்கு 3.50% முதல் 7.65% வரை வட்டி விகிதங்கள் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“