EPF சந்தாதார்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருந்து ஆஃப்லைனில் அல்லது ஆன்லைனில் விண்ணப்பித்து தொகையை திரும்பப் பெறலாம். –
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில், அவர்களின் மாத வருமானத்தில் ஒரு பகுதி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) டெபாசிட் செய்யப்படுகிறது.
முதலாளியும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிதிக்கு வழங்குகிறார். கார்பஸ் காலப்போக்கில் உருவாகிறது. இது, ஓய்வுக்குப் பிந்தைய கட்டத்தில் பயனுள்ளதாக இருக்கும்..
இது ஒரு மந்தமான முதலீடு என்ற போதிலும் உங்களுக்கு மிகவும் தேவைப்படும் போது அது பயனுள்ளதாக இருக்கும். மருத்துவ சிகிச்சை, திருமணம், பள்ளிப்படிப்பு, வீட்டுக் கடன் மற்றும் வீடு கட்டும் செலவுகள் போன்ற குறிப்பிட்ட நிதி தேவைகளின் போது பணத்தை விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது, EPF உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து முன்கூட்டியே பணம் எடுக்க அங்கீகாரம் அளிக்கிறது.
EPF முன்பணத்தை ஆன்லைனில் எப்படி பெறுவது?
1) EPFO இன் e-SEWA https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ போர்ட்டலுக்குச் செல்லவும்.
2) உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, உள்நுழைய கேப்ட்சா குறியீட்டை கவனமாக பார்த்த பதிவிடவும்.
3) ஆன்லைன் சேவைகள் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் மெனுவிலிருந்து உரிமைகோரல் (படிவம்-31, 19 & 10C)” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4) தொடர்ந்து, திறக்கும் புதிய பக்கத்தில் உங்கள் வங்கிக் கணக்குத் தகவலை உள்ளிட்டு, தொடர “சரிபார்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதையடுத்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க, “ஆம்” என்பதைக் கிளிக் செய்யவும்.
5) “ஆன்லைன் க்ளெய்மைத் தொடரவும்” என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் சமர்ப்பிக்க விரும்பும் உரிமைகோரலைத் தேர்வுசெய்ய “நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன்” என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
இதில், உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து, ஓய்வூதியம் திரும்பப் பெறுதல், கடன் அல்லது உங்கள் முந்தைய EPF-ல் இருந்து முன்பணம் அல்லது விரிவான EPF தீர்வைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன் பணத்தை எடுக்க விரும்பினால், “PF அட்வான்ஸ் (படிவம் 31)” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
6) படிவத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு நீங்கள் திரும்பப் பெற வேண்டிய தொகை மற்றும் உங்கள் முகவரியைக் குறிப்பிடவும்.
7) உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
8) உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் 15 முதல் 20 நாள்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும்.
EPF திட்டத்தில் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருந்து ஆஃப்லைனில் அல்லது ஆன்லைனில் விண்ணப்பித்து தொகையை திரும்பப் பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/