முதலீட்டாளர்கள் மற்ற முதலீட்டுத் திட்டங்களை விட இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பாலிசிகளைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்துவது அவர்கள் எதிர்கொள்ளும் கடினமான விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், வாடிக்கையாளரின் பணிகளை எளிதாக்க எல்ஐசி தனது சேவையை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. மேலும் அதன் வாடிக்கையாளர்களை ஆன்லைனில் தங்கள் பிரீமியங்களை செலுத்த அனுமதிக்கிறது.
பிரீமியத்தை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?
- எல்.ஐ.சி.யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- பிரீமியம் செலுத்த வேண்டிய பாலிசிகளின் பட்டியலைப் பார்க்க, ‘Pay Premium Online’ என்ற இணைப்பைப் பயனர் கிளிக் செய்யலாம்.
- அவர்/அவள் பிரீமியம் செலுத்த விரும்பும் பாலிசிகளைத் தேர்ந்தெடுக்க பயனருக்கு விருப்பம் உள்ளது.
- பயனர் பின்னர் ஒரு பக்கத்திற்கு அனுப்பப்படுகிறார், அதில், அவர்/அவள் பல வங்கிகளில் இருந்து பணம் செலுத்துவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியின் உள்நுழைவுப் பக்கத்திற்கும் தேர்வு செய்யலாம்.
- வங்கி தளத்தில் ஒருவர் நெட் பேங்கிங் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைய வேண்டும்.
- கட்டணத்தை செலுத்தி முடிக்கவும்.
- வெற்றிகரமான பரிவர்த்தனைக்குப் பிறகு, டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட மின்னஞ்சல் ரசீது கிடைக்கும்.
யூ.பி.ஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துவது எப்படி?
- Google Pay பயன்பாட்டைத் திறக்கவும்
- ‘பில்களை செலுத்து’ என்பதை ஓபன் செய்யவும்.
- கீழே, ‘அனைத்தையும் காண்க’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- ‘காப்பீடு’ என்பதைத் தட்டவும்
- கீழே ஸ்க்ரோல் செய்து, எல்ஐசி என்பதை க்ளிக் செய்யவும்
- உங்கள் பாலிசி எண், மின்னஞ்சல் ஐடியை உள்ளிட்டு உங்கள் கணக்கை இணைக்கவும்
- பணம் செலுத்துவதற்கு ‘செலுத்துவதற்குச் செல்லவும்’ என்பதை க்ளிக் செய்யவும்.
- வங்கியைத் தேர்ந்தெடுத்து, UPI ஐடியை உள்ளிட்டு, கட்டணத்தை முடிக்கவும்.
பிற பயன்பாடுகளிலும் ஆன்லைனில் பிரீமியத்தை செலுத்த இதே நடைமுறையை ஒருவர் பின்பற்றலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“