Advertisment

7.55 சதவீதம் வரை வட்டி: ஜூன் 30 கடைசி: இந்த எஃப்.டி திட்டங்கள் தெரியுமா?

ஐ.டி.பி.ஐ, இந்தியன் மற்றும் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி சில சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஜூன் 30ஆம் தேதி நிறைவடைகின்றன.

author-image
WebDesk
New Update
Bank of Baroda launches Mahila Samman Savings Certificate

7.55 சதவீதம் வரை வட்டி வழங்கும் நிலையில் ஜூன் மாதம் 30ஆம் தேதி நிறைவடையும் சில ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பாதுகாப்பான முதலீடு என்றாலே மக்கள் மனதில் முதலில் தோன்றுவது ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்கள்தான். இவை வருமானத்திற்கு உத்தரவாதம் அளிப்பதோடு பணத்தை இழந்துவிடுவோமோ என்ற கவலையையும் நீக்குகிறது.

இந்த நிலையில், தற்போது, ​​பல வங்கிகள் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் சிறப்பு எஃப்டிகளை வழங்குகின்றன. இருப்பினும், இந்த சிறப்பு எஃப்டி சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

Advertisment

அந்த வகையில், 2024 ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் முதலீட்டுக்கான காலக்கெடு முடிவடையும் மூன்று சிறப்பு எஃப்டிக்கயை இப்போது பார்க்கலாம். 

ஐடிபிஐ வங்கியின் சிறப்பு உத்சவ் எஃப்டி (300 நாள்கள்)

ஐ.டி.பி.ஐ வங்கி சிறப்பு உத்சவ் எஃப்டி முதலீட்டு திட்டத்தின் மூலம் வழக்கமான வாடிக்கையாளர்கள் 7.05 சதவீதமும், மூத்த குடிமக்கள் 7.55 சதவீதமும் வருமானம் பெறலாம். இந்த எஃப்டி 300 நாட்களுக்கு கிடைக்கும்.

ஐடிபிஐ வங்கியின் சிறப்பு உத்சவ் எஃப்டிகளின் காலக்கெடு (375 நாள்கள்)

ஐ.டி.பி.ஐ.யில் 375 நாள் எஃப்டிஐத் தேர்வுசெய்தால், வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7.1 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதமும் வருமானம் கிடைக்கும்.

ஐடிபிஐ வங்கியின் சிறப்பு உத்சவ் எஃப்டிகளின் காலக்கெடு (444 நாள்கள்)

ஐ.டி.பி.ஐ வங்கியின் 444 நாள்கள் எஃப்டிக்கு, வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7.2 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.7 சதவீதமும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு எஃப்டி இல் முதலீடு செய்வதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆகும்.

இந்தியன் வங்கியின் சிறப்பு எஃப்டி காலக்கெடு (300 நாள்கள்)

இந்தியன் வங்கி ஐஎன்டி சுப்ரீம் 300 டேஸ் மற்றும் ஐஎன்டி சூப்பர் 400 டேஸ் என்ற சிறப்பு எஃப்டிகளை வழங்குகிறது. 300 நாள் எஃப்டிஆனது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7.05 சதவிகிதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவிகிதம் வருமானத்தை வழங்குகிறது. மிக மூத்த குடிமக்கள் 7.8 சதவீதம் வரை சம்பாதிக்கலாம்.

இந்தியன் வங்கியின் சிறப்பு எஃப்டி காலக்கெடு (400 நாள்கள்)

இந்த 400 நாள் எஃப்டியில் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதமும், மிகமூத்த குடிமக்களுக்கு 8 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இந்த எஃப்டிகளில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆகும்.

பஞ்சாப் & சிந்து வங்கியின் சிறப்பு எஃப்டி

பஞ்சாப் & சிந்து வங்கி வெவ்வேறு காலங்களுக்கு சிறப்பு எஃப்டிகளை வழங்குகிறது. 222 நாள்கள் கால எஃப்டிக்கு 7.05 சதவீத வட்டியும், 333 நாள் எஃப்டிக்கு 7.10 சதவீதமும், 444 நாள் எஃப்டிக்கு 7.25 சதவீதமும் வழங்குகிறது. இந்தச் சிறப்பு எஃப்டிகளில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment