110சிசி ஸ்கூட்டர்களில் மிரட்ட வருகிறது ஹீரோவின் புதிய டெஸ்டினி; விலை குறைவு... சிறப்பு அம்சங்கள் இதோ!

ஹீரோ டெஸ்டினி 110 (Hero Destini 110), டி.வி.எஸ் ஜூபிடர் (TVS Jupiter), ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), ஹீரோ க்ஷூம் 110 (Hero Xoom 110), பிளஸர் பிளஸ் எக்ஸ்டெக் (Pleasure+ Xtec) போன்ற மற்ற ஸ்கூட்டர்களுடன் போட்டியிடுகிறது.

ஹீரோ டெஸ்டினி 110 (Hero Destini 110), டி.வி.எஸ் ஜூபிடர் (TVS Jupiter), ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), ஹீரோ க்ஷூம் 110 (Hero Xoom 110), பிளஸர் பிளஸ் எக்ஸ்டெக் (Pleasure+ Xtec) போன்ற மற்ற ஸ்கூட்டர்களுடன் போட்டியிடுகிறது.

author-image
WebDesk
New Update
Hero-Destini 110 1

ஹீரோ டெஸ்டினி 110 (Hero Destini 110) ஸ்கூட்டர் ரூ.72,000 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஹீரோ மோட்டார் கார்ப் (Hero MotoCorp), சந்தையில் ஹீரோ டெஸ்டினி 110 (Hero Destini 110) ஸ்கூட்டர் என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 125சிசி ஸ்கூட்டராக மட்டுமே வழங்கப்பட்ட டெஸ்டினி, தற்போது 110சிசி வெர்ஷனிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisment

ஹீரோ நிறுவனத்தின் மூன்றாவது 110சிசி ஸ்கூட்டர் மாடலான ஹீரோ டெஸ்டினி 110 (Hero Destini 110), VX மற்றும் ZX என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.72,000 மற்றும் ரூ.79,000 ஆகும்.

இந்த அறிமுகம் குறித்து, ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் இந்திய தரப் பிரிவின் தலைமை வர்த்தக அதிகாரி அஷுதோஷ் வர்மா கூறுகையில், “110சிசி ஸ்கூட்டர் பிரிவு நாட்டில் மிகப்பெரிய மற்றும் அதிக போட்டி நிறைந்த ஒன்றாகும். இது லட்சக்கணக்கான குடும்பங்கள் மற்றும் இளம் வாகன ஓட்டிகளுக்கு ஏற்றது. புதிய ஹீரோ டெஸ்டினி 110 (Hero Destini 110) மூலம், அன்றாட பயணங்களுக்கு நம்பகமான துணையாக இருக்கக்கூடிய ஒரு பல்துறை மற்றும் மலிவான ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த முக்கியமான பிரிவில் எங்கள் இருப்பை நாங்கள் பலப்படுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

ஹீரோ டெஸ்டினி 110 (Hero Destini 110) ஸ்கூட்டர்: வடிவமைப்பு

புதிய ஹீரோ டெஸ்டினி 110 (Hero Destini 110)-ன் வடிவமைப்பு, இந்த ஆண்டு தொடக்கத்தில் கணிசமான மாற்றத்தைப் பெற்று அதன் 125சிசி மாடலைப் போலவே உள்ளது. ‘நியோ ரெட்ரோ’ வடிவமைப்பு என்று அழைக்கப்படும், ஹீரோ டெஸ்டினி 110, குரோம் விளிம்புகளுடன் கூடிய எல்.இ.டி டர்ன் இண்டிகேட்டர்களைக் கொண்ட முன்புற முகப்பைக் கொண்டுள்ளது. பிரதான ஹெட்லைட் ஹேண்டில்பார் கவர் மீது பொருத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

ஹீரோ டெஸ்டினி 110 (Hero Destini 110)

Hero Destini 110 2
ஹீரோ டெஸ்டினி 110 (Hero Destini 110) ரூ.72,000 ஆரம்ப விலையில் அறிமுகம்

டெயில்லேம்ப் ஹீரோ நிறுவனத்தின் மற்ற மாடல்களில் பொதுவாகக் காணப்படும் ‘H’ வடிவ LED பாகத்தைப் பெறுகிறது. இந்த ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, 785 மிமீ நீளமுள்ள இருக்கை ஆகும். இது இந்தப் பிரிவிலேயே மிக நீளமானது, மேலும் இதில் ஒருங்கிணைந்த முதுகு சாய்மானமும் உள்ளது. டெஸ்டினி மொத்தம் ஐந்து வண்ணத் திட்டங்களில் வழங்கப்படுகிறது. VX மாடல் எடர்னல் வைட், மேட் ஸ்டீல் கிரே மற்றும் நெக்சஸ் ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. அதேசமயம் கேஸ்ட் டிஸ்க் ZX மாடல் அக்வா கிரே, நெக்சஸ் ப்ளூ, அல்லது க்ரூவி ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

ஹீரோ டெஸ்டினி 110 (Hero Destini 110): அம்சங்கள், விவரங்கள்

ஹீரோ டெஸ்டினி 110, க்ஷூம் 110 மற்றும் பிளஸர் ஸ்கூட்டர்களில் உள்ள அதே 110.9 சிசி எஞ்சினைக் கொண்டுள்ளது. இந்த மோட்டார் 7,250rpm-ல் 8 bhp சக்தியையும், 8.87 Nm உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது. ஒரு சி.வி.டி கியர்பாக்ஸ் மூலம் பவர் பின் சக்கரத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த எஞ்சினுக்கு ஹீரோ நிறுவனம்  1 லிட்டர் பெட்ரோலுக்கு 56.2 கிலோமீட்டர் மைலேஜ் கிடைப்பதாகக் கூறுகிறது. மற்ற அனைத்து ஹீரோ இருசக்கர வாகனங்களைப் போலவே, ஹீரோ டெஸ்டினி 110, ஹீரோவின் காப்புரிமை பெற்ற ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பமான i3S தொழில்நுட்பம் உள்ளது.

ஸ்கூட்டரின் அண்டர்போன் சேஸிஸ், முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் மீது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் முன்புறத்தில் 90/90 – 12 அளவு டயரையும், பின்புறத்தில் 100/80 – 12 அளவு டயரையும் கொண்டுள்ளது. பிரேக்கிங் பணிகளை 703 மிமீ முன்புற டிஸ்க் மற்றும் 697 மிமீ பின்புற ட்ரம் யூனிட் மேற்கொள்கின்றன. ஸ்கூட்டரின் எடை 114 கிலோ, மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 162 மிமீ ஆகும்.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: