டூவீலர் உற்பத்தி நிறுத்தம்: 4 நாள் ஆலைகளை மூடும் ஹீரோ நிறுவனம்

இந்நிறுவனத்தில் மொத்தம் 8599 நிரந்தர ஊழியர்களும், 21,091 தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

Hero shuts plants amid surge, first such action by big firm

Hero shuts plants amid covid19 second wave surge : நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நான்கு நாட்களுக்கு தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த நான்கு நாட்கள் உற்பத்தி நிறுத்தம் ஏப்ரல் 22 முதல் மே 1ம் தேதி இடையே இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கு இல்லை என்ற போதிலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஹீரோ நிறுவனம்.

தங்கள் நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஹீரோ நிறுவனம் இந்த முடிவை எட்டியதாக செவ்வாய்க்கிழமை அன்று தன்னுடைய அறிவிப்பை வெளியிட்டது. க்ளோபல் பார்ட்ஸ் சென்டர் தங்களின் அனைத்து உற்பத்தி ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ நிறுவனம் 11.6 மில்லியன் பைக்குகளை தயாரிக்கும் திறன் கொண்ட ஆறு உற்பத்தி ஆலைகளை ஹரித்வார், தருஹேரா, கூர்கௌன், நீம்ரனா, வதோதரா மற்றும் சித்தூரில் கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தில் மொத்தம் 8599 நிரந்தர ஊழியர்களும், 21,091 தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த உற்பத்தி நிறுத்தம் தேவையை ஈடு செய்யும் திறனில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் உற்பத்தியில் ஏற்பட்ட இழப்பை இந்த காலாண்டில் ஈடு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இடைக்கால நிறுத்தத்திற்கு பிறகு மீண்டும் தங்களின் பணிகளை ஹீரோ நிறுவனம் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கனொஹோர் எலெக்ரிக்கல்ஸ் நிறுவனம் மீரட்டில் மூன்று நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. புதன்கிழமை அன்று மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று கூறப்பட்டது. நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் என்பது கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hero shuts plants amid surge first such action by big firm

Next Story
SBI லோன் ஃபைனான்ஸ்… இதை மட்டும் நம்பாதீங்க..! எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com