நீங்கள் உங்கள் பணத்தை சாதுர்யமாக சேமிக்க நினைத்தால் தபால் துறை அறிய வாய்ப்பை அறிக்கிறது. தபால் அலுவலகத்தில் பிக்ஸ்ட் டெபாசிட் ( FD) கணக்கை தொடங்குவதன் மூலம் நீங்கள் கூடுதல் வட்டியை பெற முடியும். கூடுதல் வட்டி கிடைப்பதுடன் நம் பணத்திற்கு அரசின் உத்தரவாதமும் சேர்ந்து கிடைக்கிறது. பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கை தொடங்கினால் உங்களுக்கு காலாண்டு அடிப்படையில் வட்டி கிடைக்கும்.
தபால் நிலையத்தில் பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கு தொடங்குவது மிகவும் சுலபம். ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் பிக்ஸ்ட் டெபாசிட் கணக்குகளை நீங்கள் தொடங்க முடியும். மத்திய அரசு உத்தரவாதம் அளிப்பதால் நீங்கள் செலுத்தும் பணம் முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும்.
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பிக்ஸ்ட் டெபாசிட் கணக்குகளை தொடங்க முடியும். பணம் அல்லது காசோலை மூலமாகவும், நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் மூலமாகவும் பணத்தை செலுத்த முடியும். பிக்ஸ்ட் டெபாசிட் கணக்குகளை தனிநபர் கணக்கை கொண்டும் கூட்டாகவும் தொடங்க முடியும் . ஐந்து ஆண்டுகளுக்கு பிக்ஸ்ட் டெபாசிட் செய்தால் வரி விலக்கு பெறலாம். ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு உங்கள் பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கை மாற்ற முடியும் .
கணக்கை எப்படி தொடங்கலாம்.
ஒரு பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கை திறக்க குறைந்த பட்ச தொகையாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச தொகைக்கு எந்த வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு வருடம் வரையிலான பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கை தொடங்கினால் 5.50% வட்டி கிடைக்கும். இதுபோலவே 2 மற்றும் 3 ஆண்டுகளுக்கு பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கை தொடங்கினால் அதே 5.50% வட்டி கிடைக்கும். மேலும் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கை தொடங்கினால் 6.70 % வட்டி கிடைக்கும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil