குறைந்தபட்ச வட்டி விகிதங்கள், கணக்கு பாதுகாப்பு மற்றும் பணத்தை டெபாசிட் செய்வதற்கான நம்பகத்தன்மை அல்லது உடனடி தேவைகளுக்கு திரும்பப் பெறுதல் போன்றவற்றில் சம்பளக் கணக்கு என்றும் அழைக்கப்படும் சேமிப்புக் கணக்கு அவசியம் இருக்க வேண்டும். சேமிப்புக் கணக்கை வைத்திருப்பதன் முக்கிய குறிப்பிடத்தக்க நன்மைகளில் வட்டி சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வங்கிகளின் FD கணக்குகளை விட சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த அளவிலேயே வட்டி கிடைக்கிறது. ஆனாலும் சிறிய நிதி நிறுவனங்கள் மற்றும் சில தனியார் வங்கிகளில் நல்ல வட்டி லாபம் கிடைக்கறிது. அதிகபட்சமாக 7.25% வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. தற்போது எந்தெந்த வங்கியில் அதிக வட்டி கிடைக்கிறது என பார்க்கலாம்.
சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி தரும் 5 தனியார் வங்கிகள்
DCB வங்கி 10 ஜூன் 2021 முதல் 3% முதல் 6.75% வரையிலும்,
RBL வங்கி 2 ஜூலை 2021 முதல் 4.25% முதல் 6.25% வரையிலும்,
பந்தன் வங்கி 7 ஜூன் 2021 முதல் 3% முதல் 6%வரையிலும்,
இந்துஸ்இந்த் வங்கி 4 ஜுன் 2021 முதல் 4% முதல் 5.50% வரையிலும்,
எஸ் வங்கி 13 மே 2021 முதல் 4% முதல் 5.25% வரையிலும் வட்டி வழங்குகிறது.
சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி வழங்கும் பொதுத்துறை வங்கிகள்
பஞ்சாப் நேஷனல் வங்கி 2021 மார்ச் 1ஆம் தேதி முதல் 3% முதல் 3.50% வரையிலும்,
IDBI வங்கி 2021 மே 1ஆம் தேதி முதல் 3% முதல் 3.40% வரையிலும்,
கனரா வங்கி 2020 செப்டம்பர் 28ஆம் தேதி முதல் 2.90% முதல் 3.20% வரையிலும்,
பங்க் ஆப் பரோடா வங்கி 2021 மே 26ஆம் தேதி முதல் 2.75% முதல் 3.20% வரையிலும்,
பஞ்சாப்&சிந்த் வங்கி 2020 நவம்பர் 12ஆம் தேதி முதல் 3.10% வரையிலும் வட்டி வழங்கப்படுகிறது.
சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி தரும் 5 சிறு நிதி வங்கிகள்
உட்கார்ஷ் சிறு நிதி வங்கி 2020 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 5% முதல் 7.25% வரையிலும்,
உஜ்ஜிவன் சிறு நிதி வங்கியில் 2021 மார்ச் 06 முதல் 4% முதல் 7% வரையிலும்,
AU ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 2021 மே 17ஆம் தேதி 3.50% முதல் 7% வரையிலும்,
எக்விடாஸ் சிறு நிதி வங்கியில் 2021 ஜுன் 1ஆம் தேதி 3.50% முதல் 7% வரையிலும்,
ஜனா சிறு நிதி வங்கியில் 2021 மே 6ஆம் தேதி முதல் 3% முதல் 6.75% வரையிலும் வட்டி வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.