நீண்டகாலத்திற்கு நிரந்தர வருமானம்… போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்களை அடிச்சுக்க முடியுமா?

post office savings scheme: நீண்ட காலத்திற்கு அதிக நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களிலேயே முதலீடு செய்ய வேண்டும்

post office savings post office savings account
post office savings post office savings account

post office savings scheme: இன்றைய காலகட்டத்தில் பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். இந்திய தபால் துறை சார்பில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. நீண்ட காலத்திற்கு அதிக நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள், வங்கிகளின் Fixed Deposit ஐ விட 130-150 அடிப்படை புள்ளிகளை வழங்கும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களிலேயே முதலீடு செய்ய வேண்டும்.

ஏனெனில் ரிஸ்கும் குறைவு, பாதுகாப்பான முதலீடு, வரி சலுகை, எல்லாவற்றிற்கும் மேலாக குறைந்த வருவாயானலும், நிலையான கணிசமாக வருவாய் உண்டு. தற்போது மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. எனவே அவை மேலும் குறைக்கப்படுவதற்கு முன் முதலீடு செய்ய வேண்டும். தற்போது எஸ்பிஐ வங்கி 5 முதல் 10 வருடங்களுக்கான fixed deposit கணக்குகளுக்கு 5.4 சதவீத வட்டி வழங்குகிறது. இதை ஒப்பிடும்போது அஞ்சல சேமிப்பு திட்டங்களில் 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது 6.7 சதவீத வட்டி கிடைக்கிறது. எந்தெந்த சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் எதில் முதலீடு செய்யலாம் என பார்க்கலாம்.

5 வருட டெபாசிட் கணக்கு

போஸ்ட் ஆப்பிஸ் 5 வருட டெபாசிட் கணக்குகளுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்ச டெபாசிட் வரம்பு என்று ஏதுமில்லை. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்

60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு காலம் 5 வருடம். ஆண்டுக்கு 7.4 சதவீத லாபத்தினை அளிக்கிறது.

தேசிய சேமிப்பு பத்திரம்

அனைத்து இந்திய குடிமக்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடு ரூ.100, அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறமுடியும். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 6.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

கிசான் விகாஸ் பத்திரம்

இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக முக்கியமான திட்டம் கிசான் விகாஸ் பத்திரம். சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம், ஆயிரம் ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 6.9 சதவீத வட்டி கிடைக்கும். இதில் முதலீடு செய்யப்படும் தொகை 124 மாதங்களில் இருமடங்காக உயர்ந்துவிடும்.

ஏராளமான போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் வங்கிகளின் Fixed deposit ஐ விட அதிக பலன் தருகிறது. மேலும் அவை அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் தரத்தில் எந்த சமரசமும் இருப்பதில்லை. டிஹெச்எஃப்எல், ஐஎல்&எஃப்எஸ் மற்றும் பிராங்க்ளின் போன்றவை அதன் ஆறு கடன் பரஸ்பர நிதி திட்டங்களை நிறுத்தியுள்ளனர். ஆனால் அஞ்சலக சேமிப்புக்கு 100% பாதுகாப்பு உண்டு. ஏனென்றால், அஞ்சலக துறை நேரடியாக மத்திய அரசின் கீழ் வருகின்றது. இதன் செயல்பாடுகளும், முதலீடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Higher fixed income for long term post office monthly income scheme

Next Story
தினமும் ரூ95 எடுத்து வைங்க… மொத்தமாக ரூ14 லட்சம் ரிட்டன்! போஸ்ட் ஆபீஸ் செம்ம ஸ்கீம்India post office payments bank Tamil News: full details of Post Office Gram Sumangal Rural Postal Life Insurance Scheme
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com