இன்றைய காலகட்டத்திலும் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் முதன்மையான முதலீடு என்றால், அது வங்கி பிக்ஸட் டெபாசிட் தான். பல தனியார் வங்கிகள் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கான 3 வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.1லட்சம் மூன்று ஆண்டுகளில் 1.24 லட்சமாக உயர்கிறது. குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய் ஆகும்.
டிசிபி வங்கி மற்றும் எஸ் வங்கி
டிசிபி வங்கி மற்றும் எஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கான 3 வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீத வட்டி வழங்குகிறது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மூன்று வருடத்தில் ரூ.1.23 லட்சம் கிடைக்கிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000 ஆகும்.
ஈக்விடாஸ் வங்கி
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கான 3 வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 6.85% வட்டி வழங்குகிறது. ரூ.1 லட்சம் முதலீட்டு தொகை ரூ.1.22லட்சமாக அதிகரிக்கும்.
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் வங்கியில் மூன்று வருட FD கணக்குகளுக்கு 6.80 % வரை மூத்த குடிமக்களுக்கு வட்டி கிடைக்கிறது. ரூ.1லட்சம் முதலீடு செய்தால் மூன்று வருடத்தில் 1.22 லட்சம் லாபமாக கிடைக்கிறது.
சிறிய தனியார் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் புதிய முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி வழங்குகிறது. ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டிபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் ரூ .5 லட்சம் வரையிலான நிலையான வைப்புகளில் முதலீடு செய்ய உத்தரவாதம் அளிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil