ஃபிக்ஸட் டெபாசிட் என்பது எப்போதும் ஒரு நீண்ட கால பொருளாதார பாதுகாப்பு திட்டமாகும். வங்கிகள், வங்கிகள் அல்லாத தனியார் நிதி நிறுவனங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்க்ளை வழங்குகின்றன. இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வட்டி விகிதத்துடன் திட்டங்களை வழங்குகின்றன.
நீங்கள் ஒரு நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யும் போது, டெபாசிட் செய்யப்பட்ட தொகையானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான காலத்திற்கு உங்களால் முழு தொகையையும் எடுக்க முடியாது. இதுவும் வங்கி, நிறுவங்களுக்கு இடையே வேறுபடும்.
இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் பற்றி பார்ப்போம்.
எஸ்.பி.ஐ, HDFC வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பி.ஓ.ஐ, பி.என்.பி, யூனியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடக் வங்கி உள்பட 40க்கும் மேற்பட்ட வங்கிகள் இந்த மாதம் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 6 முதல் 8.65% வரை ஆண்டு வட்டி வழங்குகின்றன. 1,3, 5 ஆண்டுகள் வரை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“