ஃபிக்ஸட் டெபாசிட் (FD) கணக்கைத் திறக்கும் நேரத்தில், முதலீட்டாளர்கள் வெவ்வேறு வங்கி நிறுவனங்கள் வழங்கும் சமீபத்திய வட்டியை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.
சில முதலீட்டாளர்கள், அதிக வருமானம் ஈட்டுவதற்கான முயற்சியில், வங்கியல்லாத நிதி நிறுவனங்களால் (NBFCs) வழங்கப்படும் விகிதங்களை ஆராய்கின்றனர்.
இரண்டு நிறுவனங்களின் வட்டி விகிதங்களில் உள்ள வித்தியாசம் 25 அடிப்படைப் புள்ளிகள் முதல் 100 அடிப்படைப் புள்ளிகள் வரை இருக்கலாம், இருப்பினும், இந்த விளிம்பு வேறுபாடு இறுதியில் அதிக சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
NBFCகளால் வழங்கப்படும் அதிகபட்ச வட்டி விகிதங்கள்
ஸ்ரீராம் ஃபைனான்ஸ்: இது 50 மாத டெபாசிட்டுகளில் ஆண்டுக்கு 8.5 சதவீதம் வரை வழங்குகிறது. ஓராண்டு கால வைப்புகளுக்கு 7.60 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டு கால வைப்புகளுக்கு 8.05 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
பஜாஜ் ஃபின்சர்வ்: பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் அதிகபட்ச விகிதம் 44 மாத காலத்திற்கு 8.35 சதவீதம் ஆகும். இது ஒரு சிறப்பு காலத்திற்கு வழங்கப்படும் சிறப்பு வட்டி விகிதம் ஆகும்.
44 மாதங்கள் தவிர, 36 முதல் 60 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்கு FDயில் முதலீடு செய்யும் போது, வழங்கப்படும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.05 சதவீதம் ஆகும்.
முத்தூட் கேபிடல்: 5 ஆண்டு கால அவகாசத்துடன் அதன் நிலையான வைப்புகளுக்கு அதிகபட்சமாக 7.25 சதவீத வட்டியை வழங்குகிறது. குறைந்தபட்ச முதலீடு ₹1,000 ஆகும்.
சுந்தரம் ஃபைனான்ஸ்: இந்த NBFC ஆனது 555 நாட்கள், 24 மாதங்கள் மற்றும் 36 மாத காலத்திற்கு அதிகபட்சமாக 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
12-மாதங்களுக்கு குறைவான காலவரையறை கொண்ட நிலையான வைப்புகளுக்கு ஆண்டுக்கு 7.45 சதவீத வட்டி விகிதம் உள்ளது. அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் 24 மற்றும் 36 மாதங்களுக்கு நிலையான வைப்புத்தொகைக்கு 8.25 சதவீதம் வரை அதிக விகிதத்தைப் பெற உரிமை உண்டு.
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்: 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு கால பொது டெபாசிட்டுகளுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இரண்டு வருட கால அவகாசம் கொண்ட பொது வைப்புத்தொகைக்கு 7.6 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
தவிர, மூத்த குடிமக்கள் ₹20,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புகளுக்கு 0.25% கூடுதல் பலனைப் பெறுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“