மக்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் மூலம் அதிக லாபம் ஈட்டும் தனியார் வங்கிகள்!

Fee Income Bank Profit : கட்டண வருமானம், கருவூல வருமானம் இவை தவிர்த்து அந்நிய செலவாணி மூலம் நிகர லாபம் பெற்றுள்ளது எச்.டி.எஃப்.சி. வங்கி.

By: Updated: November 22, 2019, 02:21:52 PM

Increased Fee Income :  மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தும் போது வங்கிகள் அதற்கான சேவை கட்டணங்களை வசூலிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்துடன் முடிவுற்ற இரண்டாம் காலாண்டில் இந்த கட்டணங்களால் வங்கிகளுக்கு லாபம் கிடைத்திருக்கிறது.  கார்ப்பரேட், ரீட்டைல் பேங்கிங் சேவைகளுக்கான கட்டணம், ஃபோரெக்ஸ் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்படும் கட்டணம், மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ், இன்ஸ்யூரன்ஸ், ஃபினான்சியல் அட்வைஸரி சேவைகளுக்காக விதிக்கப்படும் கட்டணங்கள் அனைத்தும் பொதுவாக ஆங்கிலத்தில் Fee income என்று அழைக்கப்படுகிறது. தனியார் வங்கிகளில் ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

எச்.டி.எஃப்.சி வங்கியின் Fee Income 23% வரை உயர்ந்துள்ளாது. இந்த வங்கியின் மொத்த வருமானத்தில் 72.5% வருமானம் ஃபீஸ் மற்றும் கமிஷன்கள் மூலமாக கிடைக்கப்பெறுகிறது. காப்பீட்டு வர்த்தகத்தின் வருமானம், மியூச்சுவல் ஃபண்ட் வருமானத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த முறை சிறப்பாக அமைந்திருக்கிறது. வட்டியில்லாத வருமானம் என்று வரும் போது கருவூல லாபம் என்பது ரூ. 480.7 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 32.8 கோடி குறைவானதாகும். கட்டண வருமானம், கருவூல வருமானம் இவை தவிர்த்து அந்நிய செலவாணி மூலம் நிகர லாபம் பெற்றுள்ளது எச்.டி.எஃப்.சி. வங்கி.

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) கட்டண வருமானத்தில் ஒப்பீட்டளவில் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. Q2FY20 இல் ரூ .5,040 கோடியாக வருமானம் ஈட்டியுள்ளது. இது Q2FY19 ஐ விட 0.5% அதிகரித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு 7.36%-ல் இருந்து 6.61%-மாக மொத்த வருமானத்திற்கு கட்டண வருமானத்தின் பங்களிப்பு சரிந்தது.

மேலும் படிக்க : எஸ்.பி.ஐ வங்கியில் மினிமம் பேலன்சுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு..?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Hike in fee income increased banks profit in q2

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X