Advertisment

விண்ணை முட்டும் விமானம் கட்டணம்: சென்னை - பெங்களூருவுக்கு எவ்வளவு தெரியுமா?

Airfares have touched a new high, dues to The hike in jet fuel price Tamil News: சென்னை - புதுடெல்லி இடையேயான ரவுண்ட் ட்ரிப் (round trip) செல்ல ஒரு பயணிக்கு ரூ.18,000- ரூ20,000 வரை கட்டண செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hike in jet fuel; flight ticket price may skyrocket

Hike in jet fuel price pushes up price of the flight tickets Tamil News

Flight tickets may get costlier Tamil News: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படைப்பு உலகம் முழுதும் பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. மேலும், பங்குச்சந்தைகள் சரிந்து வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

Advertisment

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், மத்திய அரசு அதன் மீதான வரியை நீக்குவதாக அறிவித்தது. எனினும், பெட்ரோல், டீசலின் விலையில் ஏறு முகமே இருந்து வருகின்றது. இதனால், அத்தியாவசிய பொருள்களின் விலையும், போக்குவரத்து கட்டணங்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

அவ்வகையில், விமான எரிபொருட்களின் விலை உயர்வு, கடந்த சில மாதங்களாக விமான போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த வழிவகுத்துள்ளன. சென்னையில் ஒரு கிலோ லிட்டர் விமான பெட்ரோல் ரூ1,46,215.85 ஆக விற்பனையாகி வரும் நிலையில், இந்த விலை கடந்த தினங்களுக்கு விற்பனையான விலையை விட 16.3% அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான பெட்ரோலின் விலை உயர்வால், தற்போது விமானக் கட்டணங்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், விடுமுறைக்காகவோ, வணிகப் பயணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் கட்டண உயர்வு குறித்து புலம்பி வருகின்றனர். மேலும் மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்த இரண்டு வாரங்களில், புது டெல்லி அல்லது மதுரைக்கு ஒரு வழி விமானமாக (one-way flight) பயணமாக இருந்தாலும், ஒரு பயணி அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையுள்ளது. கட்டண விலை ரூ.10,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை-பெங்களூரு இடையேயான ரவுண்ட் ட்ரிப் (round trip) செல்ல ஒரு பயணிக்கு ரூ10,000-ரூ12,000 கட்டண செலவாகும். சென்னை - புதுடெல்லி இடையேயான ரவுண்ட் ட்ரிப் (round trip) செல்ல ஒரு பயணிக்கு ரூ.18,000- ரூ20,000 வரை கட்டண செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

publive-image

இது தொடர்பாக பேசியுள்ள டிராவல் ஏஜெண்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த எஸ்.ஜெயசேகரன், "முன்பு அடிக்கடி விமானங்களில் பயணம் செய்து வந்த நடுத்தர வர்க்கப் பயணிகள் இப்போது பயணத்தைப் பற்றி பயப்படுகிறார்கள். அவர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் விடுமுறை காலம் முடிவடைவதால் விடுமுறையில் இருந்து செல்பவர்கள் தொடர்ந்து வருகின்றனர். ஏனென்றால், பாதுகாப்புக் காரணங்களுக்காக இரண்டு வருடங்களாக அவர்கள் விடுமுறை எடுப்பதில் இருந்து விலகி இருக்கிறார்கள். எனவே, கோரிக்கை தொடர்ந்து வருகிறது. ஆனால் மக்கள் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர், ”என்று கூறியுள்ளார்.

சமீபத்தில், மத்திய நிதி அமைச்சகம், எந்தவொரு கூட்டத்திற்கும் பயணம் செய்ய வேண்டிய அரசு ஊழியர்கள் தங்கள் பயணத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பரிந்துரைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

publive-image

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Chennai Delhi Petrol Diesel Rate Madurai Business Tamil Business Update Petrol Airlines
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment