Advertisment

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை, அதானி குழும பங்கு

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றம் சாட்டைத் தொடர்ந்து, வாரத்தின் முதல் நாளான இன்று திங்கள்கிழமை பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. இதேபோல், அதானி குழுமப் பங்குகளும் சரிவுடன் தொடங்கியுள்ளன.

author-image
WebDesk
New Update
hindenburg research Sensex Nifty 50 open lower Adani stocks fall Tamil News

இந்த குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த இந்திய சந்தையிலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தாது என்றும், எந்த சரிவும் குறுகிய காலமே இருக்கும் என்று இரண்டு ஆய்வாளர்கள் கூறினர்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இதன் எதிரொலியாக, அதானி குழும பங்குகளின் விலை மளமளவென சரிந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமே (செபி) விசாரிக்கட்டும் என்று கூறியது.

Advertisment

2020-ம் ஆண்டில் இருந்து அதானி குழுமத்தின் 13 வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான புகார்கள் குறித்து விசாரித்து வருவதாக 'செபி' தெரிவித்தது. இதற்கிடையே, நிதி முறைகேட்டுக்காக அதானி குழுமம் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், 'செபி' தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: As Sensex, Nifty 50 open lower, Adani stocks fall after Hindenburg’s weekend strike

எனினும் 'இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உள்நோக்கம் உடையவை' என, செபி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை, அதானி குழும பங்கு

இந்நிலையில், அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றம் சாட்டைத் தொடர்ந்து, வாரத்தின் முதல் நாளான இன்று திங்கள்கிழமை பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. இதேபோல், அதானி குழுமப் பங்குகளும் சரிவுடன் தொடங்கியுள்ளன. 

காலை 9:22 மணி நிலவரப்படி தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான (நிஃப்டி 50) 0.36% குறைந்து 24,278.6 ஆக இருந்தது, மேலும் மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.ஈ சென்செக்ஸ் என்னும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்)  குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 0.34% குறைந்து 79,427.67 ஆக இருந்தது

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகிய அன்று, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களும் 2% முதல் 8% வரை சரிந்தன. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை தலா 5% சரிந்து நிஃப்டி 50 குறியீட்டில் அதிக நஷ்டமடைந்தன.

இந்த குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த இந்திய சந்தையிலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தாது என்றும், எந்த சரிவும் குறுகிய காலமே இருக்கும் என்று இரண்டு ஆய்வாளர்கள் கூறினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Mumbai Sensex
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment