Holi Bank Holiday 2025: ஹோலி பண்டிகை... வங்கிகளுக்கு இந்த தேதிகளில் விடுமுறை

Bank Holiday For Holi 2025: ஹோலி பண்டிகை நெருங்கி வருவதால், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மார்ச் 13, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹ்ஜ்க்ஃப்

Holi Bank Holiday 2025: மார்ச் 13, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை!!

Bank Holiday Holi 2025: ஹோலி பண்டிகை நெருங்கி வருவதால், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மார்ச் 13, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில், லக்னோ, ராஞ்சி, டேராடூன் மற்றும் கான்பூரில் வங்கிகள் செயல்படாது. கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், நெட் பேங்கிங் போன்ற ஆன்லைன் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். மேலும், இந்த மாநிலங்களில் ஏ.டி.எம்.களும் செயல்படும்.

Advertisment

மார்ச் 13 வியாழன் -வங்கி விடுமுறை:

ஹோலி தகன் மற்றும் கேரளாவின் ஆற்றுக்கால் பொங்கல் விழாவை முன்னிட்டு வங்கிகளுக்கு மார்ச் 13-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோலி தினத்திற்கு முந்தைய நாள் பெரிதாக நெருப்பு முட்டி கொண்டாடுவார்கள். அதற்கு ஹோலி தகனம் என்று அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆற்றுக்கால் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதனை ஒட்டி மார்ச் 13-ம் தேதி வியாழன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 14, வெள்ளி- வங்கி விடுமுறை:

Advertisment
Advertisements

ஹோலி பண்டிகையையொட்டி, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஹைதராபாத் (ஆந்திர பிரதேசம் & தெலுங்கானா), ஜம்மு, மகாராஷ்டிரா, மேகாலயா, புது டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், ஸ்ரீநகர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மார்ச் 16, ஞாயிறு – வார விடுமுறை:

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலும் கடைபிடிக்கப்படும் வழக்கமான வார விடுமுறையாகும்.

ஆன்லைன் சேவைகள் தொடர்ந்து செயல்படும்:

வங்கிகளுக்கு நேரடியாக சென்று அத்தியாவசிய வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ. சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

bank holiday holi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: