Home Insurance scheme : பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா போன்ற திட்டங்கள் மூலமாக மக்களின் வாழ்வை காப்பாற்றி வரும் மத்திய அரசு தற்போது உங்களின் வீடுகளுக்கான காப்பீட்டு திட்டங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகிறது.
ஆண்டு தோறும் உலக வெப்பமயமாதல் மற்றும் கார்பன் அளவு அதிகரித்தல் போன்ற காரணங்களால் காலநிலை மாற்றங்களையும், இயற்கை பேரிடர்களையும் அதிக அளவில் சந்தித்து வருகிறோம். அளவுக்கு அதிகமான மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புகளில் இருக்கும் வீடுகள் அடிக்கடி நீரில் மூழ்கும் அபாயத்தை சந்தித்து வருகிறது. அப்படியாக இயற்கை பேரிடர்களில் சிக்கி சேதம் அடையும் வீடுகளுக்கு ரூ. 3 லட்சம் வரை காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஜீ பிசினஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
அந்த வீட்டில் வசித்து வரும் இரண்டு நபர்களுக்கு விபத்து காப்பீட்டு பாலிசியாக தலா மூன்று லட்சம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும் என்றும், இதற்கான ப்ரீமியம் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும் என்றூம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம், வெள்ளம், மழைநீர் ஊருக்குள் புகுதல் போன்ற காரணங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் லட்சக் கணக்கான மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட உள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil