தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனிநபர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் பெற அனுமதிக்கிறது. வீடு வாங்க அல்லது புதுப்பிக்க கடனுக்காக விண்ணப்பித்திருந்தால் ஒருவர் அந்த தொகையை ஒரளவு திரும்ப பெறலாம். ஒருவர் 5 ஆண்டுகளாக சேவையில் இருந்தால் மட்டுமே இந்த கடன் பெறுதல் சாத்தியமாகும்.
பொதுவாக ஒரு நடுத்தர வர்க்க தனிநபருக்கு சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவது அல்லது வீட்டைப் புதுப்பிப்பது சற்று கடினமானது. அதனால்தான் பி.எஃப்ல் இருந்து கடன் பெறுவதற்கான ஏற்பாடு உள்ளது. புதிய வீட்டை வாங்குவதற்கு இது ஒரு நல்ல வழி மட்டுமல்ல கடன் திருப்பிச் செலுத்துவதை விரைவுபடுத்துவதற்கான ஒரு நல்ல வழியாகவும் உள்ளது. ஈபிஎஃப்ஒ தனது ஊழியர்களை தங்கள் பிஎஃப் கணக்குகளில் இருந்து 90% டெபாசிட்களை ஒரளவு திரும்பப் பெற அனுமதிக்கிறது. இதற்கு வரி விலக்கும் உண்டு.
கடன் பெற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
வீட்டை வாங்க அல்லது புதுப்பிப்பதற்கான கடன் பெற சொத்து தொழிலாளர் அல்லது அவரின் மனைவி பெயரில் இருக்க வேண்டும் அல்லது இருவர் பெயரிலும் இருக்கலாம். வீட்டின் கட்டுமானம் கடன் பெற்ற ஆறு மாத காலத்திற்குள் தொடங்கப்பட வேண்டும். மேலும், 12 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும். வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். புதுப்பித்தல் பணியும் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் ஒரு வீட்டை வாங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் படிவம் 31 ஐ நிரப்ப வேண்டும்.
கடன் திருப்பிச் செலுத்துதல்
வீட்டுக் கடனை சற்று வேகமாக கட்ட விரும்புவோர் பிஎஃப்க்கு எதிரான கடனை எடுத்துக்கொள்வதன் மூலமோ அல்லது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதன் மூலமோ இதைச் செய்யலாம். ஒரு முறை மட்டுமே இந்த வசதியை பெற முடியும். வீட்டு கடன் ஈ.எம்.ஐக்களை திருப்பிச் செலுத்துவதற்கு ஒரு நபர் 36 மாத அடிப்படை ஊதியங்கள் மற்றும் டி.ஏ அல்லது ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்கை வட்டி அல்லது மொத்த நிலுவை தொகையை அசல் மற்றும் வட்டியுடன் திரும்பப் பெற தகுதியுடையவர். ஆனால் 10 ஆண்டு காலம் பணியில் இருக்க வேண்டும்.
வீடு அல்லது வீட்டுமனை வாங்குதல்
வீடு அல்லது வீட்டுமனை வாங்க விரும்பினால்,. அந்த வீடு அல்லது மனையை விண்ணப்பதாரர் அல்லது அவரின் மனைவி அல்லது இருவரின் பெயரில் வாங்க வேண்டும். அந்த ஊழியர் மற்றும் நிறுவனத்தின் ஈபிஎஃப் பங்கை வட்டியுடன் சேர்த்து கடனாக பெறலாம், அல்லது வீட்டுமனை வாங்க 24 மாத அடிப்படை ஊதியங்கள் மற்றும் டிஏ, வீடு வாங்க 36 மாத அடிப்படை ஊதியங்கள் மற்றும் டிஏ இவற்றில் எது குறைந்ததோ அதனை கடனாக பெறலாம்.
வீட்டைப் புதுப்பித்தல்
ஒருவர் தனது வீட்டை புதுப்பிக்க, அந்த வீடு விண்ணப்பதாரர் அல்லது அவரின் மனைவி அல்லது இருவரின் பெயரில் இருக்க வேண்டும். அவர் 5 ஆண்டு பணியில் இருக்க வேண்டும். ஒரு நபரின் அடிப்படை சம்பளத்தின் 12 மடங்கு வரை கடன் கிடைக்கும்.
வீட்டை பழுதுபார்த்தல்
வீடு பழுது பார்க்க கடன் வாங்க 5 ஆண்டு பணியில் இருக்க வேண்டும். ஒரு நபரின் அடிப்படை சம்பளத்தின் 12 மடங்கு வரை கடன் கிடைக்கும். வீடு கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் வசதி மூலம் விண்ணப்பிக்கலாம்.
தொழிலாளர் அவரது UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி EPFO போர்ட்டலில் உள்நுழையவும்.
அதில், ஆன்லைன் சேவைகள் பகுதிக்குச் சென்று க்ளைம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
க்ளைம் கிளிக் செய்தவுடன் ஒரு புதிய பக்கத்திற்குச் செல்லும்.
அங்கு உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் தொலைப்பேசி எண் போன்றவை இருக்கும்.
அவற்றை சரி பார்த்தபின் Online Claim Proceed என்பதை தேர்ந்தெடுத்து கீழ் தோன்றும் மெனுவில் PF ADVANCE (FORM 31) ஐ தேர்ந்தெடுக்கவும்.
கடன் வாங்க விரும்பும் காரணத்தை உள்ளிடவும்.
பின்பு உங்களுக்கு தேவையான தொகை மற்றும் உங்கள் தற்போதைய முகவரியை நிரப்பவும்.
பின் கையொப்பமிட்டு Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்யவும்.
OTP ஐ உள்ளிட்டு Validate OTP and Sunmit Claim Form என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு உங்களுக்கு கடன் வழங்கும் செயல்முறை தொடங்கும்.
தொழிலாளர்கள், அவர்களின் குழந்தைகளின் திருமணம் அவர்களின் உயர்கல்வி, வீட்டு கடன்களை திருப்பிச் செலுத்துதல் , வீட்டைப்புதுப்பித்தல், வீடு வாங்குவது அல்லது கட்டுவது, நிலம் வாங்குவது அவசரகால மருத்துவ செலவுகள் போன்றவற்றிற்கு ஒய்வுக்கு கடன் முன் பெறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.