உங்களின் வீடு தேடி வரும் வாய்ப்பு இது... முக்கியமா சொந்த வீடு வாங்க நினைப்பவர்களுக்கு!

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இத்திட்டம் வழங்குகிறது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இத்திட்டம் வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
SBI annuity scheme, investment scheme

home loan govt home loan bank : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் 2015ஆம் ஆண்டில் மத்திய மோடி அரசால் தொடங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டி முடிக்க இத்திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இத்திட்டம் வழங்குகிறது.

Advertisment

நீங்கள் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்குத் தகுதி பெற்றிருந்தால் இத்திட்டத்தின் http://pmaymis.gov.in. என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செல்லவும்.

மெயின் மெனுவின் கீழ் உள்ள 'Citizen Assessment' என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பதாரர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

அதன் பின்னர் வரும் திரையில் உங்களது ஆதார் விவரங்களைப் பதிவிட வேண்டும்.

Advertisment
Advertisements

உங்களது தனிப்பட்ட விவரங்கள், வருமானம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய குடியிருப்பு முகவரியுடன் ஆன்லைன் PMAY விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.

கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு விவரங்களைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்கவும்.

உங்களது விண்ணப்ப நிலவரத்தை Track your Assessment Status என்ற வசதியில் சென்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: