சொந்த வீடு.. பெரிய குடும்பம் தொடங்கி நடுத்தர குடும்பங்கள் வரை பலரின் கனவும் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான். இதற்காக நாம் அனைவரும் முதலில் எடுக்கும் முயற்சி ஹோம் லோன். வங்கிகளில் ஹோம் லோன் வசதியை பயன்படுத்திக் கொண்டு ஒரு வீட்டை கட்டிவிட வேண்டும் என்றே பலரும் திட்டமிடுவார்கள்.
ஆனால், அதை எப்படி முறையாக செய்ய வேண்டும், வீட்டுக்கடனுக்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளைவு வட்டி விகிதம் வசூலிப்பார்கள் போன்ற நடைமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை. இந்த பிரச்சனைகளுக்கு வழிச் சொல்லும் விதமாக எந்தெந்த வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம என்ற தகவலை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஐ.சி.ஐ.சி.ஐ. , எச்.டி.எப்.சி. வங்கிகள் ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.3 சதவீதம் குறைத்துள்ளன.புதிதாக வீட்டுக்கடன் ரூ.30 லட்சம் வரை பெறும் பெண்களுக்கு வட்டி 8.35 சதவீதமாகவும், மற்றவர்களுக்கு 8.40 சதவீதம் வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ரூ. 30 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை கடன் பெறும் பெறும் வாடிக்கையாளர்ளுக்கான வட்டி 8.50 சதவீதம் என்பதில் மாற்றமில்லை. ரூ.75 லட்சத்துக்கு அதிகமாக கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி 8.75 சதவீதத்தில் இருந்து 8.55 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இத்தனை காரணங்களுக்காக எஸ்.பி.ஐ உங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது!
வேலைக்குச் செல்லும் பெண்கள் ரூ.30 லட்சம் வரை வீட்டுக்கடன் பெற்றால், அவர்களுக்கு வட்டி 8.35 சதவீதமும், மற்றவர்களுக்கு 8.40 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதம் இதுதான்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி:
பணிபுரியும் பெண்களுக்கு 30 லட்சம் வரையிலான கடனுக்கு 8.7% முதல் 9.2% வரை வட்டி. 30 லட்சத்துக்கு மேல் 8.80% -9.30% வரை வட்டி. மற்றவர்களுக்கு 30 லட்சம் வரை 8.75% – 9.25% வரை வட்டியும், 30 லட்சத்துக்கு மேல் 8.85% – 9.35% வரையும் வட்டி வசூலிக்கப்படும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி:
பணிபுரியும் பெண்களுக்கு 8.55% வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. மற்றவர்களுக்கு 8.6%. தொழில் செய்வோருக்கு 8.7% வட்டி. கடன் நடைமுறைகளுக்கு, கடன் தொகையில் 0.5% கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உடன் சேவை வரியும் உள்ளது.