இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குகின்றன. நீங்கள் வீட்டுக் கடன் பெற நினைத்தால் பிற வங்கிகளின் கடன் விகிதங்களையும் ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.
ஏனெனில் வங்கிகள் போட்டி விகிதத்தில் ஹோம் லோன் கடன்கள் வழங்குகின்றன. தற்போது நாம் 6 வங்கிகளின் ஹோம் லோன் குறித்து பார்க்கலாம்.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா தற்போது சம்பளம் வாங்குபவர்களுக்கும், சம்பளம் பெறாதவர்களுக்கும் ஒரே மாதிரியான வட்டி விகிதங்களை வசூலிக்கிறது.
வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ஆண்டுதோறும் 8.40 சதவீதம் முதல் 10.60 சதவீதம் வரை இருக்கும். கடன் தொகை விண்ணப்பதாரரின் சிபில் (CIBIL) மதிப்பெண்களை பொறுத்து மாறுபடும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மலிவு விலையில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. வங்கியின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 8.40 சதவீதத்திலிருந்து தொடங்குகின்றன.
வாடிக்கையாளர்கள் 30 ஆண்டுகள் வரையிலான கடன் காலத்தை தேர்வு செய்யலாம். கூடுதலாக, எஸ்பிஐ பெண்களுக்கு கடன் வாங்குபவர்களுக்கு 0.05% வட்டி சலுகையை வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி, ரூ.35 முதல் ரூ.75 லட்சம் வரையிலான கடன் தொகைகளுக்கு, ஐசிஐசிஐ வங்கி சம்பளம் பெறும் நபர்களுக்கு 9.5 முதல் 9.8 சதவீதம் வரையிலும், சுயதொழில் கடன் வாங்குபவர்களுக்கு 9.65 முதல் 9.95 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்களை வசூலிக்கிறது.
பாங்க் ஆஃப் இந்தியா
பாங்க் ஆஃப் இந்தியா தற்போது மிகவும் மலிவு விலையில் வீட்டுக் கடன் விருப்பத்தை வழங்குகிறது. வங்கியின் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 8.30 சதவீதத்தில் தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் சொத்து மதிப்பில் 90 சதவீதம் வரை கடன்களைப் பெறலாம்.
ஹெச்டிஎஎஃப்சி வங்கி
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஎஃப்சி வங்கி, சாதகமான வீட்டுக் கடன் விருப்பங்களை வழங்குகிறது. வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரையிலான கடன் தொகைகளுக்கு 8.35 சதவீதத்தில் தொடங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மலிவு கடன்களை வழங்குகிறது. இந்த வங்கி, ஆண்டுக்கு 8.45 சதவீதம் முதல் 10.25 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன்களை வழங்குகிறது.
நல்ல சிபில் மதிப்பெண்களைக் கொண்டவர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற தகுதி பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“