home loan news : வீட்டுக்கடன்களை வாங்க வேண்டும் என்றால் உங்களின் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியமாக அங்கமாக செயல்படுகிறது. குறைந்தபட்சம் 750 புள்ளிகள் இருந்தால் தான், குறைந்த வட்டிக்கு உங்களால் வீட்டுக்கடன் வாங்க முடியும். ஆனால் அதற்கும் குறைவாக உங்களின் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் என்ன செய்வது? சில நேரங்களில் அதிக வட்டிக்கு நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் அல்லது உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அபாயமும் உள்ளது.
அதிக வட்டி கட்ட தயாராக இருங்கள்
சில நிறுவனங்கள் உங்களின் விருப்பதை உணர்ந்து வீடு கட்ட கடன்கள் வழங்குவது உண்டு. ஆனாலும், மாதாந்திர தவணை மிகவும் அதிகமாக இருக்கும். ஆனாலும் வருடத்திற்கு ஒருமுறை வாடிக்கையாளர்களின் க்ரெடிட் ஸ்கோர்களை மேற்பார்வையிடுவது வங்கிகளின் வழக்கம். தேவைப்படும் போது ரிஸ்க் ப்ரீமியமும் மாற்றப்படும். ஆரம்பத்தில் நீங்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கியிருந்தாலும், உங்களின் க்ரெடிட் ஸ்கோர்களை ஒரு வருடத்தில் நீங்கள் உயர்த்தி இருந்தால் உங்களின் கடனுக்கான வட்டி குறைய துவங்கும்.
உங்களின் எல்.டி.வியை குறைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை சிந்திக்கவும்
உங்களின் லோன் டூ வேல்யூ ( loan to value (LTV)) விகிதத்தை குறைக்கு பட்சத்தில், இது குறைவான க்ரெடிட் ஸ்கோருடன் வீட்டுக் கடனை வாங்க உதவி செய்யும். குறைவான எல்.டி.வி. அதிகப்படியான அபாயங்களை குறைக்கும். இருந்தாலும் நீங்கள் உங்கள் கையில் இருந்து நிறைய பணத்தை இ.எம்.ஐ.யாக செலுத்த நேரிடும். நினைவில் கொள்ளுங்கள், கடன் வழங்கும் நிறுவனங்களின் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் உங்களின் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும் பட்சத்தில், எல்.டி.வி குறைவாக இருந்தாலும் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இணை விண்ணப்பதாரரை இணைக்கவும்
நல்ல கிரெடிட் ஸ்கோரைக் கொண்டிருக்கும் ஒருவரை இணை விண்ணப்பதாரராக இணைக்கும் போது உங்களுக்கு கடன் வாய்ப்பு அதிகரிக்கலாம். கடனை திருப்பி செலுத்தும் திறனை சோதிக்க இணை விண்ணப்பதாரரின் வருவாய் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவை சோதனையிடப்படும். உங்கள் துணை, பெற்றோர்கள், அல்லது சம்பாதிக்கும் சகோதரன் ஆகியோரை உங்களின் இணை விண்ணப்பாதாரராக இணைத்துக் கொள்ளலாம். ஆனால் அண்ணன் – தங்கை, சகோதரிகள் மற்றும் திருமணமாகாத மகளை வைத்திருக்கும் பெற்றோர்களை இணை விண்ணப்பதாரராக சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஹவுசிங் ஃபினான்ஸ் கம்பெனி (HFC)
குறைந்த கிரெடிட் ஸ்கோர்களுடன் உங்களின் வீட்டுக் கடன் விண்ணப்பங்கள் வங்கிகளில் நிராகரிக்கப்பட்டால் நீங்கள் எச்.எஃப்.சியை நாடலாம். இங்கு வங்கிகளைக் காட்டிலும் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும். ஆனால், சமீப காலங்களில் போட்டி வர்த்தகத்தில் முன்னணியில் இருக்க நிறைய நிறுவனங்கள் தங்களின் வட்டியை குறைத்துள்ளன.
பேச்சுவார்த்தை
தற்போது கடன் பெற்றுள்ள நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல் உங்களுக்கு ஒரு சுமூகமான முடிவை எட்ட உதவும். பேச்சுவார்த்தையின் போது நீங்கள் உங்களின் குறைந்த எல்.டி.வி. யை சுட்டிக் கட்டலாம். அல்லது வருமானம் அதிகமானதற்கான சான்று மற்றும் இணை விண்ணப்பதாரரின் சான்றுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆனாலும் வங்கிக்கு தேவையான கிரெடிட் ஸ்கோர்களைக் காட்டிலும் குறைவான கிரெடிட் ஸ்கோர் இருக்கும் பட்சத்தில் இந்த பேச்சுவார்த்தை வேலை செய்யாது.
சிறிய கடன்களை குறைக்கும் வழிகளை யோசிக்கவும்
ஏற்கனவே சிறிய அளவிலான கடன்கள் இருந்தால் அவற்றை முதலில் அடைக்கவும். இது உங்களின் க்ரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும். மேலும் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் ஆகும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள கடன்களை திருப்பிச் செலுத்துவது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனை அதிகரிக்கும் மற்றும் பெரிய கடன் தொகையைப் பெற உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil