வீட்டு கடனில் நடக்கும் மோசடி? இந்த 5 விஷயங்களை மறக்காம நோட் பண்ணுங்க!
வீட்டுக் கடன் மூலமாக நடைபெறக் கூடிய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விவரங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் பணத்தை மிச்சப்படுத்த உதவியாக இருக்கும்.
வீட்டுக் கடன் மூலமாக நடைபெறக் கூடிய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விவரங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் பணத்தை மிச்சப்படுத்த உதவியாக இருக்கும்.
புதிதாக வீட்டுக் கடன் வாங்கலாம் என்ற யோசனையில் இருப்பவர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். அந்த வகையில் வீட்டுக் கடனில் நடைபெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றில் இருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்ள முடியும் என்று பாஸ்வாலா யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை தற்போது காணலாம்.
Advertisment
அந்த வகையில் வீட்டுக் கடன் வாங்கும் போது அதற்கான கால அவகாசத்தை முதலில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு குறைவான கால அவகாசத்தில் வீட்டுக் கடனை செலுத்தி முடிக்கின்றோமோ அந்த அளவிற்கு நமக்கு லாபமாக இருக்கும். ஏனெனில், கால அவகாசம் அதிகரிக்கும் போது நாம் செலுத்தும் வட்டியும் அதிகரிக்கும்.
வீட்டுக் கடன் பெறுவதற்கு முன்பாக வங்கியில் குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறதா அல்லது நிதி நிறுவனங்களில் குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறதா என்று ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில், வங்கிகளில் தான் நிலையான வட்டி விகிதத்தை கடைபிடிப்பார்கள். நிதி நிறுவனங்களில் இதனை மாற்றி அமைப்பார்கள். மேலும், ரெப்போ ரேட் குறையும் போது வங்கிகளில் மட்டும் வட்டி விகிதத்தை குறைக்கின்றனர். ஆனால், நிதி நிறுவனங்களில் அவ்வாறு செயல்படுவதில்லை. இவற்றை கருத்திற்கொண்டு வீட்டுக் கடன் பெற வேண்டும்.
வீட்டுக் கடன் பெறும் போது அதே வங்கியில் அதற்கான காப்பீடு எடுக்க வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஏதேனும் இயற்கை பேரிடர் காலங்களில் நம்முடைய வீட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டால் அப்போது காப்பீட்டு தொகையை நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக தான் பெரும்பாலான நேரங்களில் வீட்டிற்கு காப்பீடு எடுக்க அறிவுறுத்துவார்கள். இதனை வங்கிகளில் எடுக்கும் போது, அதற்கும் சேர்த்து இ.எம்.ஐ கட்ட வேண்டிய சூழல் உருவாகும். அந்த வகையில், உங்களுடைய நிதி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
Advertisment
Advertisements
இப்போது, ஒரு வங்கியில் வீட்டுக் கடன் செலுத்திக் கொண்டிருக்கும் நபர் அதனை மற்றொரு வங்கிக்கு மாற்ற முடியும். ஆனால், இதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. இதற்காக உங்களுடைய கடன் செலுத்தும் காலம் 15 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும், 0.5 சதவீதம் அளவிற்கு வட்டி வித்தியாசம் இருக்க வேண்டும். ஆனால், இதற்கும் குறைவான கால அளவு மற்றும் வட்டி விகிதம் இருந்தால் அவ்வாறு மாற்றும் போது உங்களுக்கு லாபம் இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் ரூ. 15 லட்சத்திற்கு வீட்டுக் கடன் பெற்றிருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். இப்போது உங்களுக்கு ரூ. 1 லட்சம் கிடைத்து இருக்கிறது என்றால், அதனை கடனில் செலுத்தலாம் என்று நீங்கள் நினைப்பீர்கள். இப்படி செலுத்தும் போது, உங்களுடைய இ.எம்.ஐ-யை குறைக்கலாம் என்று வங்கிகளில் கூறுவார்கள். ஆனால், இ.எம்.ஐ தொகையை குறைக்காமல், வட்டி செலுத்த வேண்டிய கால அவகாசத்தை குறைக்க வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்த வேண்டும். இது கூடுதல் காலத்திற்கு வட்டி செலுத்தும் நிர்பந்தத்தை தவிர்க்க உதவும்.
இத்தகைய விஷயங்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு வீட்டுக் கடன் பெறும் போது நிதி இழப்பில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.