வீடு கட்ட இது சூப்பர் லோன் திட்டம்… ஆவணங்கள் சரிபார்ப்பும் தேவையில்லை, அலைச்சலும் மிச்சம்!

இது நிச்சயமாக வங்கிகளில் இருந்து வழங்கப்படும் கடன்களைக் காட்டிலும் பாதுகாப்பானதாகவும் அலைச்சல் குறைவாகவும் எளிதாகவும் முடியும் திட்டம்.

Home loan, house loan, EMI, business news, tamil news, Business news in Tamil

home loans from parents and relatives : இது ஒரு மிகவும் எளிமையான கடன் திட்டம். திட்டம் என்று கூட கூற முடியாது. ஒரு எளிமையான வழி. பாரம்பரியமாக பல ஆண்டுகளாக நாம் செய்து கொண்டிருப்பதும் இது தான். வீடு கட்ட கடன்களை பெற்றவர்களிடம் இருந்து பெறுவது. அல்லது நம்பிக்கைக்குரிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து பெற்று அதை உரிய நேரத்தில் திருப்பி செலுத்துவது. இது நிச்சயமாக வங்கிகளில் இருந்து வழங்கப்படும் கடன்களைக் காட்டிலும் பாதுகாப்பானதாகவும் அலைச்சல் குறைவாகவும் எளிதாகவும் முடியும் திட்டம்.

இதனால் உங்களுக்கு என்ன நன்மை என்று யோசிக்கிறீர்களா?

நிறைய வங்கி ஆவண சமர்பிப்பு, பேர்ப்பர் ஒர்க்கில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

இரு தரப்பில் இருந்தும் சுமூகமான பேச்சுவார்த்தையால் நீங்கள் குறைவான வட்டிக்கு கடனை பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது பெற்றோர்களுக்கு உங்களின் கிரெடிட் ஹிஸ்டரி தெரிந்திருக்கும். எனவே அவர்கள் மேற்கொண்டு உங்களை சோதிக்கமாட்டார்கள்.

எவ்வளவு காலத்தில் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் பேசியே முடிவு செய்துவிடலாம்.

கடனை திருப்பி செலுத்த கொஞ்சம் தாமதமானாலும் கூட உங்களுக்கு எதிராக அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கமாட்டார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Home loans from parents and relatives

Next Story
ரூ. 250 போதும்; பெண் குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்தை பாதுகாக்கும் சுகன்யா சம்ரிதி யோஜனாSukanya Samriddhi Yojana 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com