/tamil-ie/media/media_files/uploads/2020/05/template-2020-05-25T122513.091.jpg)
Home loans Interest rates | வங்கிகள் வழக்கமாக 9-11 சதவிகிதம் வட்டி விகிதங்களை ஹோம் லோனுக்கு வசூலிக்கின்றன.
Home loans Interest rates | பெரும்பாலான வங்கிகள் வழக்கமாக 9-11 சதவிகிதம் வட்டி விகிதங்களை ஹோம் லோனுக்கு வசூலிக்கின்றன. இருப்பினும், கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் அளவு ஆகியவை பொறுத்து இந்த வட்டி விகிதங்கள் மாறுபடும்.
ஹோம் லோன் வட்டி விகிதங்கள்
ஐசிஐசிஐ வங்கியை பொறுத்தமட்டில் 9 சதவீதத்தில் இருந்து ஹோம் லோன்கள் தொடங்குகின்றன. மற்றொரு தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கி ஹோம் லோன்கள் 8.75 சதவீதத்தில் இருந்து தொடங்குகின்றன.
பேங்க் ஆஃப் பரோடா 8.40 சதவீதம் முதல் 10.60 சதவீதம் வரை ஹோம் லோன்களை வழங்குகின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி, 9.40 சதவீதம் முதல் 11.10 சதவீதம் வரை வீட்டுக் கடன்களை வழங்குகின்றன.
ஹெச்டிஎஃப்சி வங்கியை பொறுத்தமட்டில் வீட்டுக் கடன் விகிதங்கள் 8.55 சதவீதம் முதல் 9.60 சதவீதம் வரை காணப்படுகின்றன.
வரி நன்மைகள்
வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், வீட்டுக் கடனின் அசல் தொகையைத் திருப்பிச் செலுத்த அனுமதிக்கப்படும் அதிகபட்ச விலக்கு ரூ. 1.5 லட்சம் ஆகும்.
பிரிவு 80C இன் கீழ் விலக்கு என்பது பிபிஎஃப் கணக்கு, ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், வரி சேமிப்பு நிலையான வைப்புத்தொகை, தேசிய சேமிப்புச் சான்றிதழ் போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகள் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் ஆக உள்ளன.
வட்டி வரி விலக்கு
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24ன் கீழ், வட்டி வரிச் சலுகைகளை செலுத்துவதற்காக வீட்டுக் கடனில் இருந்து விலக்கு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.