ஹோம் லோன் வேண்டுமா? முதலின் இந்த வங்கிக்கு செல்லுங்கள்!

மற்ற வங்கிகளை விட குறைந்த வட்டி விகிதம் அளிக்கும் டாப் 3 வங்கிகள் இவைதான்.

பெரிய குடும்பம் தொடங்கி நடுத்தர குடும்பங்கள் வரை பலரின் கனவும் சொந்த வீடு தான். அதுவும் சென்னையில் சொந்த வீடு வாங்குபவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. தற்போதைய காலகட்டத்தில், உரிய தகுதிகள் இருப்பின் வீட்டுக்கடன் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல.

வீட்டுக் கடன் :

வங்கிகளில் ஹோம் லோன் வசதியை பயன்படுத்திக் கொண்டு ஒரு வீட்டை கட்டிவிட வேண்டும் என்றே பலரும் திட்டமிடுவார்கள்.ஆனால், அதை எப்படி முறையாக செய்ய வேண்டும், வீட்டுக்கடனுக்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளைவு வட்டி விகிதம் வசூலிப்பார்கள் போன்ற நடைமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை.

இந்த பிரச்சனைகளுக்கு வழிச் சொல்லும் விதமாக வீட்டுக்கடனுக்கு எந்த வங்கி சிறந்தது குறித்த சில தகவல்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.

வங்கிகள்:

அதிக கிரெடிட் (சிபில்) ஸ்கோர் வைத்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு வங்கிகள் மிக எளிதாக வீட்டுக் கடன் வழங்கிவிடும். குறைவான கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களுக்குக் கடன் கிடைப்பது மிகவும் கஷ்டம்.

 

தெரிந்துக் கொள்ளுங்கள்… கனரா வங்கியின் அறிவிப்பு.. இனிமேல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பிரச்சனையே இல்லை!

கடனுக்கு ஒப்புதல் அளிக்கும் செயல்பாடுகள் வங்கிகளைப் பொறுத்தவரை மிகக் கடுமையானதாக உள்ளன. பல்வேறு சரிபார்ப்புகளுக்குப் பின்னர்தான் கடனுக்கு ஒப்புதல் வழங்கப்படுகின்றன.

வீட்டு கடன் பெற்று வீடு வாங்குவதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது வீட்டு கடன் வசதி அளிக்கும் நிறுவனங்களிடம் தக்க கட்டணம் செலுத்தி கடனுக்கான முன் அனுமதி (PreApproval) பெற்று கொள்வது பாதுகாப்பானது.

வீட்டுகடனில் மற்ற் வங்கிகளை விட குறைந்த வட்டி விகிதம் அளிக்கும் டாப் 3 வங்கிகள் இவைதான்.

எஸ்பிஐ வங்கி :

எஸ்பிஐயில் வீட்டுக்கடன் வசதியில் பல திட்டங்கள் உள்ளன. 30 லட்சம் வரையிலான தொகைக்கு கடன் பெறும் பணி செய்யும் பெண்களுக்கு 8.45-8.55% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 8.55% வட்டி. பணி அல்லாது வியாபரம் செய்வோருக்கு 8.6% – 8.7% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி:

பணிபுரியும் பெண்களுக்கு 30 லட்சம் வரையிலான கடனுக்கு 8.7% முதல் 9.2% வரை வட்டி. 30 லட்சத்துக்கு மேல் 8.80% -9.30% வரை வட்டி. மற்றவர்களுக்கு 30 லட்சம் வரை 8.75% – 9.25% வரை வட்டியும், 30 லட்சத்துக்கு மேல் 8.85% – 9.35% வரையும் வட்டி வசூலிக்கப்படும்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி;

பணிபுரியும் பெண்களுக்கு 8.55% வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. மற்றவர்களுக்கு 8.6%. தொழில் செய்வோருக்கு 8.7% வட்டி. கடன் நடைமுறைகளுக்கு, கடன் தொகையில் 0.5% கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உடன் சேவை வரியும் உள்ளது.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close