Advertisment

என்னது 100 கிலோ மீட்டர் மைலேஜ் ஆஆஆ.. வருகிறது புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்

இந்த ஸ்கூட்டரில் வழக்கத்துக்கு மாறாக டயர்கள் சற்று பெரிய அளவில் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Honda Activa 7G Estimated Price

இந்த வாகனம், 2023, ஜூலை–ஆகஸ்ட் மாதத்துக்குள் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் விலைகள் தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகின்றன.

லிட்டர் ரூ.100க்கு மேல் விற்பனையாகிறது. இதனால் பெரும்பாலான நடுத்தர வர்க்க வாகன ஓட்டிகள் மைலேஜ் தரும் வாகன ஓட்டிகளுக்கு மாறிவருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் ஹோண்டா 7G வேரியன்ட்டில் வாகனம் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வாகனம், 2023, ஜூலை–ஆகஸ்ட் மாதத்துக்குள் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் வழக்கத்துக்கு மாறாக டயர்கள் சற்று பெரிய அளவில் இருக்கும். பெட்ரோலில் மட்டும் ஓடும் இந்த ஸ்கூட்டர்கள் நல்ல மைலேஜ் தரும் என்று செய்திகள் வெளியாகின்றன.

அதாவது கிட்டத்தட்ட லிட்டருக்கு 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ வரை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. சில செய்திகள் 70-80 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும் என்று கூறப்படுகின்றன.

எது எப்படியோ இன்றைய காலகட்டத்தில் 75க்கு மேல் மைலேஜ் கிடைத்தாலே போதுமானது தானே. மேலும் இந்த வாகனத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், சிக்னல் உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக காத்திருக்க நேரிட்டால் தானாகவே வண்டி ஆஃப் ஆகும் வசதியும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment