புதிய இருசக்கர வாகனத்தை Honda Motorcycle & Scooter India (HMSI) நிறுவனம், திங்கள்கிழமை (ஜன. 23) அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை ரூ.74,356 ஆகும்.
Advertisment
இது ஸ்டாண்டர்ட், டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஆகிய மூன்று வகைகளில் வருகிறது. உலகளவில் புகழ்பெற்ற ஹோண்டா ஸ்மார்ட் கீயுடன் அறிமுகப்படுத்தப்பட்ட 2023 ஹோண்டா ஆக்டிவா ஸ்மார்ட் ஸ்மார்ட் அன்லாக், ஸ்மார்ட் ஃபைண்ட், ஸ்மார்ட் ஸ்டார்ட், ஸ்மார்ட் சேஃப் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.
புதிய ஸ்மார்ட்டர் ஆக்டிவா 2023-ஐ அறிமுகப்படுத்திய ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அட்சுஷி ஒகடா கூறுகையில், “ஆக்டிவா ஸ்கூட்டர் சந்தையை மீண்டும் வசப்படுத்தும்” என்றார்.
மேலும், “இது எங்கள் வாடிக்கையாளர்களின் எப்போதும் மாறிவரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். இது, வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும்” என்றார்.
ஹோண்டா ஆக்டிவா அறிமுகம்
இந்த நிலையில், ஹோண்டா புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஆக்டிவா ஸ்மார்ட் உடன் புளூடூத் இணைப்பையும் வழங்கக்கூடும். இயந்திர ரீதியாக, ஹோண்டா ஆக்டிவா 6G இன் அனைத்து வகைகளும் அதே 109.51cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, FI இன்ஜினைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/