ஹோண்டா கார்கள் விலை தள்ளுபடி | 2024 ஜூலை மாத தொடக்கத்தில் ஹோண்டா கார் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. ஹோண்டா தற்போது அதன் போர்ட்ஃபோலியோவில் 3 கார்களைக் கொண்டுள்ளது. அவை, ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகும்.
இந்த 3 கார்களும் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதாவது, இந்தக் கார்கள் ரூ.66 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. மேலும், ஹோண்டா டீலர்ஷிப்பில் இருந்து அமேஸில் சிஎன்ஜியை நிறுவிய அனைத்து வாடிக்கையாளர்களும் ரூ. 40,000 திரும்பப் பெறுவதன் மூலம் பயனடைவார்கள்.
எனினும், எரிபொருள் சிஎன்ஜிக்கு மாறியுள்ளதாக வாடிக்கையாளர் அறிவிப்பு மற்றும் பதிவுச் சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னரே இதைச் செய்ய முடியும்.
ஹோண்டா கார்கள் தள்ளுபடி
இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹோண்டா கார் ஆக ஹோண்டா சிட்டி உள்ளது. 1998 முதல் இந்திய சாலைகளை ஆளும் இந்தக் கார்கள் ரூ.68,000 முதல் ரூ.89,000 வரையிலான தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேசமயம் ஹோண்டா சிட்டியின் ஹைப்ரிட் வேரியன்ட் ரூ.65,000 தள்ளுபடியில் உள்ளது.
ஹூண்டாய் க்ரெட்டாவை பொறுத்தவரை ரூ.55,000 முதல் ரூ.67,000 வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. ஹோண்டா விரைவில் அமேஸ் என்ற காரை அறிமுகப்படுத்த உள்ளது. மறுபுறம், 2030 ஆம் ஆண்டு இறுதிக்குள் 5 SUV களை அறிமுகப்படுத்துவதாக ஹோண்டா உறுதியளித்துள்ளது. இவற்றில், Honda Elevate EV மற்றும் Honda Elevate 7-சீட்டர் ஆகியவை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“