2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைமுறைக்கு வரவிருக்கும் ரியல் டிரைவிங் எமிஷன்ஸ் (ஆர்டிஇ) விதிமுறைகளுடன், கார் தயாரிப்பாளர்கள் இந்தியாவிற்கான டீசல் எஞ்சின் சலுகைகளை மறுபரிசீலனை செய்கின்றனர்.
அவற்றில் ஒன்று ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹோண்டா, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிட்டி மற்றும் அமேஸ் செடான்களில் அதன் டீசல் விருப்பங்களை படிப்படியாக நிறுத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டகுயா சுமுரா, “ஆர்டிஇ விதிமுறைகள் வரவுள்ளன. டீசல் என்ஜின்களால் அவற்றைச் சந்திக்க முடியாது என்று கூறினார்.
உலகளவில் கூட, பெரும்பாலான பிராண்டுகள் டீசல் என்ஜின்களை நிறுத்திவிட்டன, அதே நேரத்தில் மாருதி சுசுகி போன்ற இந்திய கார் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே டீசல் என்ஜின்களில் இருந்து விலகி, தூய பெட்ரோல் என்ஜின்கள் மற்றும் சார்ஜிங் கார்களில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் ஆலையில் தயாரிக்கப்படும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்களை அடுத்த ஆண்டு முதல் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும்.
1.6-லிட்டர் ஆலை முதன்மையாக தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது” என்றார்.
அந்த வகையில், ஹோண்டா டீசல் கார்கள் தயாரிப்பு வரும் (2023)ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நிறுத்தப்படும் என்று தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil