Hotstar disney tamil news: இறுதியாக ஏப்ரல் 3 முதல் Disney+ Hotstar இந்தியாவில் வந்துவிட்டது. எதிர்பார்த்தப்படி Disney+ உள்ளடக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் Hotstar இந்தியாவில் தனது விலை அடுக்குகளை சற்று மாற்றியமைத்துள்ளது. அதன் கட்டணம் மற்றும் திட்டம் குறித்த விவரங்கள் இதோ.
Disney+ ஐ இந்தியாவுக்கு கொண்டு வர Hotstar தயாரானது. முன்னதாக மார்ச் 29 அன்று Disney+ இந்தியாவில் வெளியிடப்பட இருந்தது, ஆனால் ஏப்ரல் 3 முதல் அது இந்தியாவை வந்து சேர்ந்தது. எதிர்பார்த்தப்படி Disney+ உள்ளடக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் Hotstar இந்தியாவில் தனது விலை அடுக்குகளை சற்று மாற்றியமைத்துள்ளது. Disney+ Hotstar Premium-த்தின் சந்தா விலை ஒரு வருடத்துக்கு ரூபாய் 1,499/- (ரூபாய் 999/- லிருந்து அதிகமாக) என்றும், Disney+ Hotstar VIP திட்டம் ஒரு வருடத்துக்கு ரூபாய் 399/- (ரூபாய் 365 லிருந்து அதிகமாக) கிடைக்கும். முன்பு போல விளம்பர ஆதரவுடன் அடிப்படை அடுக்குகளை Hotstar தொடர்ந்து வழங்கும்
IPL 2020 துவக்கத்துடன் இணைந்து Disney+ இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பப்படவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக IPL ஒத்திவைக்கப்பட்டதால் Hotstar ம் தனது வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்தது.
இதற்கும் முன்பாக Hotstar தனது சேவையை வரையறுக்கப்பட்ட beta வெளியீட்டில் சோதனை செய்து பார்த்தது, அதில் Hotstar Premium (மற்றும் VIP) வாடிக்கையாளர்கள் இந்தியாவில் அனைத்து Disney+ உள்ளடக்கத்தையும் சிறிது காலம் எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி பார்க்க முடியும்.
Disney+ ன் இந்திய வெளியீட்டை முன்னிட்டு, Hotstar அமைதியாக தனது ஆப் மற்றும் லோகோவை மேம்படுத்தியுள்ளது. இரண்டும் beta சோதனையின் போது சின்னதாக மேம்படுத்தப்பட்டது. Hotstar அந்த ஆப்பை Disney+ Hotstar என்று மறு பெயரிட்டுள்ளது. Disney+ க்கான உள்ளடக்கம் Hotstar ஆப்பில் iOS மற்றும் ஆண்ட்ராய்டுக்கு என ஒரு தனி tab ல் இருக்கும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Hotstar disney tamil news hotstar disney plus subscription