scorecardresearch

ரெப்போ உயர்வு.. ஹோம் லோன் நிலை என்ன?

பெரும்பாலான வங்கிகளில் முன்பு 7 சதவீதமாக இருந்த வீட்டுக் கடன் விகிதம் தற்போது 9 சதவீதமாக உள்ளது.

ரெப்போ உயர்வு.. ஹோம் லோன் நிலை என்ன?
வீட்டுக் கடனைப் பெறத் திட்டமிடும் போது, EMIகளை சரியான நேரத்தில் செலுத்துவதற்கான உத்திகள் எப்போதும் இருக்க வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 225 பிபிஎஸ் வரை நடப்பாண்டில் உயர்த்தியுள்ளது. இதனால், தற்போதைய விகிதங்கள் 6.25 சதவீதமாக உள்ளன.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தன.
முன்பு 7 சதவீதமாக இருந்த வீட்டுக் கடன் விகிதம் தற்போது பெரும்பாலான வங்கிகளில் 9 சதவீதமாக உள்ளது. இது இன்னமும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

எனவே, நீங்களும் வீட்டுக் கடன் பெற்று வீடு வாங்கத் திட்டமிட்டிருந்தால், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி போன்ற முன்னணி வங்கிகள் வழங்கும் சமீபத்திய கடன் விகிதங்களை முதலில் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

ஹோம் லோன்
தற்போது, வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 8.4 சதவீதத்தில் இருந்து தொடங்கி 9.05 சதவீதமாக இருக்கும். HDFC வங்கியின் வீட்டுக் கடன் விகிதங்கள் பெண்களுக்கு 8.6 சதவீதத்திலும் மற்றவர்களுக்கு 8.65 சதவீதத்திலும் தொடங்கி ரூ. 30 லட்சம் வரையிலான கடனுக்கு 9.1 சதவீதமாக உயர்கிறது. கடந்த மாதம் உயர்த்தப்பட்ட இந்த விகிதமும் இன்னும் சில நாள்களில் உயரலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Housing loan new interest rates