Sovereign Gold Bonds in 2021 : எஸ்.ஜி.பி. தங்க பத்திர திட்டத்திற்கான வெளியீட்டு விலையை கிராம் ஒன்றுக்கு ரூ. 4,777 என்று அறிவித்துள்ளது. மே 17ம் தேதி முதல் 5 நாட்களுக்கு சந்தாவுக்கு திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் எஸ்ஜிபியில் சேர விரும்பினால் மேலும் 5 திட்டங்கள் சந்தாவிற்கு திறந்திருக்கும்.
பொருளாதார விவகாரத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து தங்க பத்திரங்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த பத்திரங்கள் மே 2021 முதல் செப்டம்பர் 2021 வரை ஆறு தவணைகளில் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்திய அரசு சார்பாக ரிசர்வ் வங்கியால் சவரன் தங்க பத்திரங்கள் வழங்கப்படும். அதிகாரப்பூர்வ அறிக்கையில், சவரன் தங்க பத்திர திட்டம் 2021-22-ன் முதல் தொடரில் சந்தாவிற்காக மே 17ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பத்திரங்கள் மே 25ம் தேதி அன்று வழங்கப்படும்.
தங்கப் பத்திரங்களை எங்கே வாங்கலாம்?
தங்க பத்திரங்கள் திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் (சிறு நிதி வங்கிகள் மற்றும் கட்டண வங்கிகள் தவிர), ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (எஸ்.எச்.சி.ஐ.எல்), நியமிக்கப்பட்ட தபால் நிலையங்கள் மற்றும் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை லிமிடெட் மற்றும் பாம்பே பங்குச் சந்தை லிமிடெட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனைகள் மூலம் விற்கப்படும்.
தங்க பத்திரத்திற்கான அம்சங்கள்
சந்தா காலத்திற்கு முந்தைய வாரத்தின் கடைசி மூன்று வேலை நாட்களில் இந்தியா புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் வெளியிட்டுள்ள 999 தூய்மை தங்கத்தின் இறுதி விலையின் எளிய சராசரியின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஜி.பி. டெனோமினேஷன் கிராம் அளவில் வழங்கப்படுகிறது.
எஸ்ஜிபி டெனோர்: அடுத்த வட்டி செலுத்தும் தேதிகளில் 5வது வருடத்திற்குப் பிறகு எக்ஸிட் விருப்பத்துடன் கூடிய 8 வருடம் பத்திரத்திற்கான காலமாக உள்ளது.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பு : குறைந்தபட்ச அனுமதிக்கப்பட்ட முதலீடு 1 கிராம் தங்கமாக இருக்கும். சந்தாவின் அதிகபட்ச வரம்பு தனிநபருக்கு 4 கிலோவாக உள்ளது.
எச்.யூ.எஃப்.ற்காக 4 கிலோ தங்கம் மற்றும் நிறுவனங்களுக்கு 20 கிலோ தங்கம் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச அதிகபட்ச மதிப்பு இந்திய அரசாங்கத்தால் அடிக்கடி அறிவிக்கப்படும். வருடாந்திர உச்சவரம்பில் அரசு மற்றும் இரண்டாம் நிலை சந்தையிலிருந்து வாங்கிய ஆரம்ப வெளியீட்டின் போது வெவ்வேறு தவணைகளின் கீழ் சந்தா பெற்ற பத்திரங்களும் அடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil