Advertisment

2023 பட்ஜெட்.. கட்டுமான பொருள்களின் ஜி.எஸ்.டி குறையுமா? 5 முக்கிய எதிர்பார்ப்புகள்

எஃகு மற்றும் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி முறையே 18% மற்றும் 28% ஆக இருப்பதால் இது ஒரு வீட்டின் அதிக விலைக்கு வழிவகுக்கிறது.

author-image
WebDesk
New Update
How Budget 2023 can help homebuyers

ரியல் எஸ்டேட் துறை நிபுணர்களின் கூற்றுப்படி, வீடு வாங்குபவர்களுக்கு பட்ஜெட் 2023 உதவும்.

Home Loan Rules Change, Change in Affordable Housing Limit,

2022ல் வீட்டுத் துறை நன்றாக இருந்தது. அனாரோக் ரிசர்ச் அறிக்கையின்படி, 2021ம் ஆண்டை விட 2022ல் குடியிருப்பு சொத்து விற்பனை 50% அதிகரித்துள்ளது.

இருப்பினும், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வீட்டுத் துறையைப் பொறுத்தவரை எல்லாமே சீராக இல்லை. இதற்கிடையில், 2023 பட்ஜெட்டில் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் தரப்பிலிருந்து இந்தத் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisment

வீட்டுக் கடன் / ரியல் எஸ்டேட் துறை இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது, வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் சில சவாலான காலங்களை எதிர்கொள்கிறது.

இத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க, கடனளிப்பவர்கள் நியாயமான விலை மற்றும் கவர்ச்சிகரமான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளுடன் பல்வேறு விதமான போட்டிக் கடன் தயாரிப்புகளை வழங்க வேண்டும்.

இந்தத் துறையானது போட்டித்தன்மையுடன் இருக்கவும் வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் உறுதியை வழங்கவும் இது உதவும்,” என்கிறார் BASIC வீட்டுக் கடனின் நிறுவனர் மற்றும் CEO அதுல் மோங்கா.

ரியல் எஸ்டேட் துறை நிபுணர்களின் கூற்றுப்படி, வீடு வாங்குபவர்களுக்கு பட்ஜெட் 2023 உதவும். அந்த 5 வழிகள் பின்வருமாறு.

வீட்டுக் கடன் விதிகள் மாற்றம்

IMGC இன் தலைமைச் செயல் அதிகாரி அனுஜ் சர்மா கூறுகையில், வீட்டுக் கடன்கள் மலிவு விலையில் கிடைக்க வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும். கடன் விகிதங்கள் ரிசர்வ் வங்கியின் கொள்கை விகிதங்களைப் பொறுத்தது என்றாலும், வீட்டுக் கடன்களைப் பெறுவதற்கான விதிகளைத் தளர்த்துவதன் மூலம் பட்ஜெட் வீடு வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும்” என்றார்.

மேலும், தேவையான முன்பணத்தைக் குறைத்தல் அல்லது வீட்டுக் கடனுக்கான தகுதி வரம்புகளை எளிதாக்குதல் போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும், இது வீடு வாங்குபவர்களுக்கு நிதியுதவியைப் பெறுவதை எளிதாக்கும்” என்றார்.

உயரும் விகிதங்களுக்கு மத்தியில் வரி தள்ளுபடி

வட்டி விகிதத்தை அதிகரிப்பது வீட்டுக் கடன் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உயரும் விகிதங்கள் வாங்குபவர்களுக்கு மலிவு விலையை ஒரு முக்கிய கவலையாக மாற்றும். எனவே, பிரிவு 24 (பி)ன் கீழ் வீட்டுக் கடன் வட்டிக்கான வரிச் சலுகையை ரூ.5 லட்சமாக உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மலிவு வீட்டுவசதி வரம்பில் மாற்றம்

மோங்காவின் கூற்றுப்படி, இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்களில் மலிவு வீட்டுவசதியின் கீழ் கருதப்படும் ஒரு சொத்தின் தற்போதைய விலை ரூ.45 லட்சமானது பொருத்தமானதல்ல, இது ரூ.75 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

ஜிஎஸ்டி நிவாரணம்

கட்டுமானத்தில் உள்ள மற்றும் மலிவு விலை வீடுகளுக்கான தற்போதைய ஜிஎஸ்டி அமைப்பு டெவலப்பர்கள் மீது கூடுதல் சுமையை உருவாக்குகிறது, இது வாங்குபவர்களுக்கு சொத்துக்களின் அதிக விலைக்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், எஃகு மற்றும் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி முறையே 18% மற்றும் 28% ஆக இருப்பதால் இது ஒரு வீட்டின் அதிக விலைக்கு வழிவகுக்கிறது. இந்தச் சுமையைக் குறைக்கவும், சொத்துக்களின் விலையை அதிகரிக்கவும், வரவிருக்கும் பட்ஜெட்டில் உள்ளீட்டு வரிக் கடனை (ITC) மீட்டெடுப்பதை அரசாங்கம் பரிசீலிக்கலாம்.

வாடகை வீடு

Pharande Spaces இன் தலைவரும், CREDAI புனே-மெட்ரோவின் தலைவருமான அனில் பாரண்டே கூறுகையில், இந்தியாவில் வாடகை வீட்டுச் சந்தை இன்னும் வளர்ச்சியடையாமல் உள்ளது. 2023 பட்ஜெட்டில் வாடகை வீட்டுத் திட்டங்களைக் கட்டும் டெவலப்பர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கி இந்தத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Home Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment