கடன் வாங்க போறீங்களா? சிபில் ஸ்கோர் முக்கியம்... புதியவர்களுக்கான எளிய வழிகாட்டி இதோ!

நீங்கள் ஒருபோதும் கடன் வாங்கியதில்லை அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தியதில்லை என்றால், முதல் முறை கடன் வாங்குபவராக, உங்கள் சிபில் ஸ்கோரை படிப்படியாக உருவாக்குவது எப்படி என்பதை இங்கே காணலாம்.

நீங்கள் ஒருபோதும் கடன் வாங்கியதில்லை அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தியதில்லை என்றால், முதல் முறை கடன் வாங்குபவராக, உங்கள் சிபில் ஸ்கோரை படிப்படியாக உருவாக்குவது எப்படி என்பதை இங்கே காணலாம்.

author-image
WebDesk
New Update
Cibil score boost

நீங்கள் தனிநபர் கடன் பெற திட்டமிட்டிருந்தால், ஆனால் இதற்கு முன் கிரெடிட் கார்டு அல்லது கடன் வாங்கியதில்லை என்றால், கடன் வழங்குநர்கள் உங்களை "கடன் உலகிற்கு புதியவர்" என்று அழைப்பார்கள். இதன் பொருள், உங்களுக்கு இன்னும் ஒரு கடன் வரலாறு இல்லை; மேலும் சிபில் ஸ்கோர் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. முதல் முறை கடன் வாங்குபவர்களுக்கு இது முற்றிலும் சாதாரணமானது. மேலும், கடன் பெறுவதற்கு முன், கிரெடிட் ஸ்கோர் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Advertisment

சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண் ஆகும். இது கடந்த காலத்தில் நீங்கள் கடன் வாங்கிய பணத்தை எவ்வளவு சிறப்பாக நிர்வகித்தீர்கள் என்பதைக் காட்டுகிறது. கடன் வழங்குநர்கள் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பு எவ்வளவு என்பதை மதிப்பிடுகிறார்கள். உங்கள் ஸ்கோர் அதிகமாக இருந்தால், நல்ல வட்டி விகிதத்தில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த ஸ்கோர் பல காரணிகளை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இதில், கடனை நீங்கள் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துகிறீர்களா, கிடைக்கக்கூடிய கடனில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் ஆகியவை அடங்கும். 

உங்கள் சிபில் ஸ்கோரை உருவாக்குவது எப்படி?

Advertisment
Advertisements

புதிதாக தொடங்கும் உங்களை போன்றவர்களுக்கு, கடன் பதிவை உருவாக்குவது மிக முக்கியமானது. நீங்கள் ஒரு கடன் தயாரிப்பை பயன்படுத்த தொடங்கியவுடன், ஒவ்வொரு பில் அல்லது இ.எம்.ஐ-யையும் சரியான நேரத்தில் செலுத்துவது மிக முக்கியம். பணம் செலுத்தும் வரலாறு உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிக முக்கியமான காரணியாகும். ஒரே ஒரு தவறிய அல்லது தாமதமான கட்டணம் கூட உங்கள் ஸ்கோரை கணிசமாக சேதப்படுத்தும். இதைத் தவிர்க்க, தானியங்கு கட்டணங்களை அமைக்கவும் அல்லது நினைவூட்டல்களை பயன்படுத்தவும். அதனால் ஒருபோதும் தவணை தேதியைத் தவறவிட மாட்டீர்கள்.

உங்கள் ஸ்கோரின் மற்றொரு முக்கிய பகுதி கடன் பயன்பாடு (credit utilisation) ஆகும். அதாவது, உங்கள் மொத்த கடன் வரம்பில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதாகும். இதை 30% க்கும் குறைவாக வைத்திருப்பது சிறந்தது. எனவே, உங்களிடம் ரூ. 10,000 வரம்புள்ள கிரெடிட் கார்டு இருந்தால், ஒரு பில்லிங் சுழற்சியில் ரூ. 3,000 க்கு மேல் செலவு செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் அதை முழுமையாக திருப்பிச் செலுத்தினாலும், உங்கள் கடனில் பெரும்பாலானவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது, நீங்கள் கடனை அதிகம் நம்பியிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கலாம். மேலும், குறுகிய காலத்தில் பல கிரெடிட் கார்டுகள் அல்லது கடன்களுக்கு விண்ணப்பிப்பதை தவிர்க்கவும். 

உங்கள் கடன் அறிக்கையை (credit report) கண்காணியுங்கள். ஒவ்வொரு கடன் முகமையிலிருந்தும் ஆண்டுக்கு ஒரு இலவச அறிக்கை கோர உங்களுக்கு உரிமை உண்டு. அதைத், தொடர்ந்து சரிபார்ப்பது அனைத்து தகவல்களும் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய உதவுகிறது. மேலும், உங்கள் பெயரில் ஏதேனும் பிழை அல்லது மோசடி இருந்தால், அதை முன்கூட்டியே அறிய உதவுகிறது.

Credit card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: