/indian-express-tamil/media/media_files/2025/10/31/aadhaar-card-2-2025-10-31-19-13-48.jpg)
உங்கள் ஆதார் அட்டையுடன் மொபைல் எண் பதிவு செய்யப்படாமல் இருந்தாலும், ஆதார் பி.வி.சி அட்டையை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும் என்று ஆதார் ஆணையமான யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) அறிவித்துள்ளது.
ஆதார் எண்ணுக்கு பதிவு செய்த மொபைல் எண்ணை இழந்துவிட்டீர்களா? அல்லது மொபைல் எண்ணை பதிவு செயய்வில்லையா? இதனால், ஆதார் பி.வி.சி அட்டை வாங்க முடியாமல் இருக்கிறீர்களா? கவலை வேண்டாம், பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணைக் கொண்டும் ஆதார் பி.வி.சி அட்டையை வாங்கலாம். ஒரே ஓ.டி.பி-யில் வேலை முடிந்தது. பி.வி.சி ஆதார் அட்டை வாங்க எளிய வழி இதோ.
உங்கள் ஆதார் அட்டையுடன் மொபைல் எண் பதிவு செய்யப்படாமல் இருந்தாலும், ஆதார் பி.வி.சி அட்டையை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும் என்று ஆதார் ஆணையமான யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) அறிவித்துள்ளது.
ஆதார் பி.வி.சி அட்டையை ஆர்டர் செய்ய, நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் 'Mobile number not registered' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மாற்று மொபைல் எண் (Alternate mobile number) ஒன்றைப் பதிவு செய்து, அதில் வரும் OTP எண்ணைச் சரிபார்க்க வேண்டும்.
அதன் பிறகு ஆன்லைனில் கட்டணம் செலுத்தி ஆர்டர் செய்தால், உங்கள் ஆதார்-இல் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு பி.வி.சி அட்டை நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணைக் கொண்டு ஆதார் PVC அட்டை பெறுவது எப்படி?
Did you know? You can order your #AadhaarPVCCard online even without an Aadhaar-registered mobile number.
— Aadhaar (@UIDAI) October 28, 2025
Simply use any alternate mobile number, verify with the OTP sent to that number, and get your Aadhaar #PVC Card delivered to your #Aadhaar-registered address.
To order your… pic.twitter.com/50AWkPkgVs
புதிய விதி: ஆதார் அட்டையுடன் மொபைல் எண் பதிவு செய்யப்படாமல் இருந்தாலும், எந்தவொரு மாற்று மொபைல் எண்ணைப் பயன்படுத்தியும் ஆதார் PVC அட்டையை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.
செயல்முறை:
QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
'Mobile number not registered' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மாற்று மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்க்க வேண்டும்.
ஆன்லைனில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
விநியோகம்: ஆர்டர் செய்யப்பட்ட பி.வி.சி (PVC) அட்டை உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
பி.வி.சி அட்டையை ஆர்டர் செய்ய, myAadhaar போர்ட்டலை (https://myaadhaar.uidai.gov.in/genricPVC) அல்லது mAadhaar செயலியைப் பயன்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us