ஆதார் அட்டை இப்போது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாத ஆவணமாக மாறிவிட்டது. இது நாட்டின் முதன்மை அடையாளச் சான்றாகும், மேலும் வங்கிக் கணக்கைத் தொடங்க, ஓட்டுநர் உரிமத்தைப் பெற மற்றும் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்ற பெரும்பாலான சேவைகளைப் பெற ஆதார் அட்டைப் பயன்படுகிறது.
உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்றால், அது உங்களுக்கு மிகவும் சிக்கலாக இருக்கும், ஏனெனில் இது நாட்டில் உள்ள அனைத்து சேவைகளிலும் அல்லது பொது இடங்களிலும் சரிபார்ப்புக்கு தேவைப்படுகிறது. கவலைப்பட வேண்டாம், ஏனெனில் உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்றால், அதை மீட்டெடுக்க எளிய மற்றும் விரைவான வழி உள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனைத்து ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் டிஜிட்டல் சேவையைத் தொடங்கியுள்ளது, இதனால் அவர்கள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆன்லைனில் அதை மீட்டெடுக்க முடியும். உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் உங்கள் UID எண் மற்றும் ஆதார் அட்டையை ஆன்லைனில் பெறலாம்.
ஆன்லைனில் ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி?
UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில், ஆதார் சேவைகள் தாவலின் கீழ் உள்ள My Aadhaar விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
இப்போது, ‘Retrieve Lost or Forgoten EID/UID’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், பெயர் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐ பெறுவீர்கள். இந்த OTP ஐ இணையதளத்தில் உள்ளிடவும்.
நீங்கள் கோரிய UID/EID எண் உங்கள் மொபைலுக்கு SMS மூலம் அனுப்பப்படும்.
உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய UID எண்ணைப் பயன்படுத்தலாம்.
ஆதார் அட்டையை மீண்டும் அச்சிடுவது எப்படி?
UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 'ஆர்டர் ஆதார் மறுபதிப்பு' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
வலைப்பக்கத்தில் UID அல்லது EID விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இப்போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் ஆதார் UID, EID அல்லது VID ஆகியவற்றை கேப்ட்சா குறியீட்டுடன் உள்ளிடவும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
ஆன்லைனில் பணம் செலுத்தி, அதற்கான ரசீதைச் சேமிக்கவும்.
உறுதிப்படுத்தல் SMS மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் மற்றும் உங்கள் ஆதார் அட்டை அச்சிடப்பட்டு உங்களுக்கு அனுப்பப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil