மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முக்கிய நோக்கமே காப்பீட்டுதாரர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது காப்பீட்டு தொகையை பெறுவதுதான். காப்பீடு செய்தவர் காப்பீட்டு தொகையை பணமில்லா முறை (cashless mode) அல்லது முதலில் செலவு செய்துவிட்டு பின்பு பெற்று கொள்ளும் (reimbursement) முறை ஆகிய ஏதாவது ஒரு முறையில் பெற்றுக் கொள்ளலாம். காப்பீட்டு நிறுவனம் அட்டவனைப்படுத்தியுள்ள மருத்துவமனைகளில் (networking hospitals) நீங்கள் சிகிச்சை எடுத்தால் பணமில்லா முறையில் சிகிச்சை பெறலாம். அந்த அட்டவணையில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் முதலில் காப்பீடு செய்தவர் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை கட்டி விட்டு பிறகு காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்லலாம்.
அதை எப்படி பெறுவது என்பதை பார்ப்போம்?
காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவியுங்கள் : நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு மருத்துவமனையில் தங்கி சிகிட்சை பெறப் போகிறீர்கள் என்றால் அது குறித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு முன்பே தெரிவியுங்கள். அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அதுகுறித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு 24 மணி நேரத்துக்கு உள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: காப்பீட்டு நிறுவன அட்டவனையில் இல்லாத மருத்துவமனை என்றால், மருத்துவமனைக்கான கட்டணத்தை முதலில் நீங்கள் உங்கள் கையிலிருந்து கொடுக்க வேண்டும். பிறகு காப்பீட்டு நிறுவனம் அதை திரும்ப தரும். காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து மருத்துவ செலவு தொகையை திரும்ப பெற, தேவையான அனைத்து ஆவணங்களையும் ரசீதுகள், discharge summary, prescriptions, copy of investigation reports மற்றும் மருந்தகத்துக்கான ரசீது ஆகியவற்றை நீங்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன் பெற்றுக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பம் – காப்பிட்டு நிறுவனத்திடம் இருந்து காப்பீட்டு தொகையை திரும்ப பெற நீங்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் உள்ள சில பிரிவுகளை மருத்துவமனை நிரப்பி நோயாளிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கையெழுத்திட வேண்டும். எனவே இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
காப்பீட்டு தொகை விண்ணப்பதை சமர்பித்தல்: காப்பீட்டு தொகை விண்ணப்பதை மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்பிக்கும் போது கூடுதல் ஆவணங்களான discharge summary, மருந்து ரசீதுகள், காப்பீட்டின் ஒரு நகல் மற்றும் investigation reports ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும். காப்பீட்டு செய்தவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்க பட்ட உடனே இதை சமர்பிக்க வேண்டும்.
வங்கி குறித்த விவரங்களை தெரிவுக்கவும்: காப்பீட்டுத் தொகையை திரும்ப பெறும் போது காப்பீடு செய்தவர் தனது வங்கி கணக்கு குறித்த விவரங்கள் மற்றும் IFSC குறியீடு ஆகியவற்றை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"