தமிழக அரசு பட்டா மற்றும் சிட்டாவை ஆன்லைன் மூலம் பார்ப்பது எப்படி?

சிட்டா என்பது பட்டா பதிவேட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒன்று. இது ஒரு நபர் அல்லது நபர்களுக்கு சொந்தமான நிலத்தின் உரிமை விவரங்களை வழங்குகிறது.

By: March 15, 2020, 6:15:58 PM

பட்டா என்பது நில வருவாய் பதிவு இது நிலத்தின் உரிமையை நிருவுவதற்கான ஒரு ஆவணம். ஒரு சொத்தின் உண்மையான உரிமையாளரின் பெயரில் பட்டா இருக்கும். பட்டா பதிவேடு தாலுகா அலுவலகங்களில் பராமரிக்கப்படும் மேலும் அனைத்து நில உடைமைகளின் உரிமை விவரங்களும் இதில் இருக்கும்.

பட்டாவில் நிலம் அமைந்திருக்கும் மாவட்டத்தின் பெயர், வட்டம் மற்றும் கிராமத்தின் பெயரும் பட்டாவின் எண்ணும் இடம்பெற்றிருக்கும். மேலும் அந்த நிலத்தின் உரிமையாளர் பெயர் அவரது தந்தையார் பெயரோடு இடம்பெற்று இருக்கும். நஞ்சை நிலமா அல்லது புஞ்சை நிலமா என்ற விவரமும், நிலத்தின் பரப்பு விவரம், தீர்வை தகவல்கள் ஆகியவை இருக்கும்.

பத்திரப் பதிவு, பட்டா மாறுதல்: ஆன்லைனில் மிகச் சுலபம்

சிட்டா என்பது பட்டா பதிவேட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒன்று. இது ஒரு நபர் அல்லது நபர்களுக்கு சொந்தமான நிலத்தின் உரிமை விவரங்களை வழங்குகிறது.

முதலில் தமிழக அரசின் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள் வழங்கும் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.

அதில் உள்ள நில உரிமை (பட்டா & புலப்படம் / சிட்டா/நகர நில அளவைப் பதிவேடு) விவரங்களை பார்வையிட என்ற தேர்வை சொடுக்கவும்.

அடுத்து வரும் புதிய பக்கத்தில் உங்கள் மாவட்டம் மற்றும் பகுதி வகை கிராமப்புறமா அல்லது நகரப்புறமா என்பதை தேர்வு செய்து சமர்பிக்க வேண்டும்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான விவரங்களை கொடுக்க வேண்டும். அதில் மாவட்டம், வட்டம், நகரம், நிலத்தின் புல எண் மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்து சமர்பிக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:How do view tamil nadu government patta and chitta via online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X