Advertisment

ரூ.25,000 மாதச் சம்பளம்; பி.எஃப்-ல் ரூ.1 கோடி ரிட்டன் பெறலாம்: எப்படி?

ரூ. 25,000 மாதச் சம்பளத்துடன் பி.எஃப்-ல் ரூ. 1 கோடி ரிட்டன் பெற எவ்வளவு காலம் எடுக்கும்? என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
EPFO Higher Pension Last Date Extended for Employees and Employers

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் ஓய்வூதிய சேமிப்பு திட்டம் ஆகும். இது அனைத்து சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

Advertisment

ஒவ்வொரு மாதமும், ஒரு ஊழியர் தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை இ.பி.எஃப் சேமிப்பிற்கு வழங்க வேண்டும். அதே போல் நிறுவனம் 3.67% ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.  இதற்கு அரசு 8.25%  ஆண்டு வட்டி வழங்குகிறது. 

இந்நிலையில், ஒரு நபர் மாதம் ரூ.25,000 சம்பாதித்து பி.எஃப்-ல் பணத்தை சேமித்து வந்தால் அவரது ஓய்வுதியத்திற்கு பயன்படும் வகையில்  ரூ. 1 கோடி ரிட்டன் பெற எவ்வளவு காலம் எடுக்கும்? என்று பார்ப்போம். 

பி.எஃப் பிடித்தம் மாதம் ரூ.2,300 

25 வயதுடைய ஒரு நபர், அடிப்படை ஊதியம் ரூ.15,000 உடன் மாதம் ரூ.25,000 சம்பளம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  சம்பள உயர்வின் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் EPF பங்களிப்பு 10% அதிகரிக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

அதன்படி,  மாத பி.எஃப் பங்களிப்பு  12% அடிப்படை ஊதியம்  + 3.67% நிறுவன பங்கு  = ரூ. 1750+550 = ரூ 2300 மாத பி.எஃப் பிடித்தம் ஆகும். 

பி.எஃப் சேமிப்பில் மாதம் ரூ 2300 மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பங்களிப்பு 10% அதிகரிப்புடன்,  

30 ஆண்டுகளில் ஒரு நபரின் பி.எஃப் சேமிப்பில் ரூ.1 கோடியை அடைய முடியும். 55 வயதில், தனிநபர் கணக்கில் இவ்வாறு சேமிக்கும் போது ரூ.1.07 கோடி பெற முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment