Advertisment

Aadhaar Alert: ஆதாருடன் எத்தனை மொபைல் நம்பர் இருக்கு? கண்டுப்பிடிப்பது ஈசி!

நீங்கள் பயன்படுத்ததாத மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால், அதனை நீக்குவதன் மூலம் ஆதார் மோசடியை தடுத்திட முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadhaar Alert: ஆதாருடன் எத்தனை மொபைல் நம்பர் இருக்கு? கண்டுப்பிடிப்பது ஈசி!

வங்கிக் கணக்கு, பான் அட்டை போன்வற்றில் ஆதார் எண்ணை சேர்ப்பது கட்டாயமாகிவிட்டது. அனைத்து அரசு வேலைகளுக்கும் தற்போது ஆதார் அட்டை அவசியமாகும். அதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

குறிப்பாக, அடையாள அட்டையை பயன்படுத்தி நாம் பல சிம் கார்டுகளை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். பலர் டேட்டா ஆஃபர்களுகாக புதுபுது சிம் கார்டுகளை வாங்கி, அதன் வேலிட்டி முடிந்ததும் உபயோகிக்காமல் விட்டுவிடுவார்கள்.

இதனை தடுக்கும் நோக்கில் DoT வெளியிட்ட புதிய அறிவிப்பில், ஒரு ஆதார் மூலம் 9 நம்பர்களை மட்டுமே அதிகப்பட்சம் வாங்கி பயன்படுத்த முடியும். இது மக்களிடையை குழப்பத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதாருடன் எத்தனை நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது தான்.

எனவே, இந்த சந்தேகத்திற்கான விடையை, தொலைத்தொடர்புத் துறையின் (DoT) புதிய போர்டல் மூலம் எளிதாக கண்டறிந்துவிடலாம். ஆதாருடன் எத்தனை சிம் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளதை என்பதை சரியாக காட்டிவிடும்.

இந்த போர்டல், 'மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ்' (TAFCOP) என அழைக்கப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் பயன்படுத்ததாத மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால், அதனை நீக்குவதன் மூலம் ஆதார் மோசடியை தடுத்திட முடியும். அதனை கண்டறியும் வழிமுறையை கீழே காணுங்கள்

Step 1: முதலில் TAFCOP இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://tafcop.dgtelecom.gov.in/ செல்ல வேண்டும்.

Step 2: உங்களது மொபைல் நம்பரை பதிவிட்டு, ஓடிபி கிளிக் செய்ய வேண்டும்.

Step 3: ஓடிபியை பதிவிட்டதும், உங்கள் வேலிடேஷன் பிராசஸ் ப்ராசஸை முடிவடைந்து Sign in செய்யப்படும்.

Step 4: அடுத்து தோன்றும் திரையில், உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட அனைத்து மொபைல் நம்பர்களையும் காணலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aadhar Update Aadhar Card Uidai Aadhaar Pvc Aadhar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment