How many SIM cards can you buy using one Aadhaar card : ஒரு நிபந்தனையின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டில், தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) ஒரு பயனருக்கான இணைப்புகளின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியது. M2M தகவல்தொடர்புக்கு தேவையான சிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற காரணத்தால் இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 9 சிம்கார்டுகள் சாதாரண மொபைல் தொலைத் தொடர்புக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது சிம்கார்ட் ஸ்லாட்கள் உள்ள டிவைஸில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மற்ற 9 சிம்களை எம்2எம் தகவல்தொடர்புகளுக்கு மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆப்பிள் வாட்ச்களை விற்பதால் டிஓடியின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்தன. புதிதாக வெளியாகியுள்ள ஆப்பிள் வாட்சில் eSIM சேவை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களைப் பற்றி, M2M முன்பே நிறுவப்பட வேண்டும் என்றால், சந்தாதாரர் சரிபார்ப்பை நிறைவு செய்வது சாதன தயாரிப்பாளர்களின் பொறுப்பாகும். இருப்பினும், சாதனத்தை வேறொரு பயனருக்கு மாற்றினால் சந்தாதாரர் விவரங்களை புதுப்பிப்பது இறுதி பயனரின் பொறுப்பாகும்.
2019 ஆம் ஆண்டில், மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ் (TAF-COP) போர்டல் வலைத்தளத்தை DoT உருவாக்கியது. சந்தாதாரர்களுக்கு உதவவும், அவர்களின் பெயரில் உள்ள மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை சரிபார்க்கவும், அவர்களின் கூடுதல் மொபைல் இணைப்புகளை முறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கவும் இது உருவாக்கப்பட்டது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
https://tafcop.dgtelecom.gov.in/ என்ற அந்த இணையத்தில் பல்வேறு தகவல்களை பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். 9க்கும் மேற்பட்ட இணைப்புகளை கொண்ட நபர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் அளிக்கப்படும்.
மேலும் உங்களின் பெயரில் 9க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் நீங்கள் மேலே கூறியிருக்கும் இணையத்திற்கு சென்று உங்களின் புகார்களை பதிவு செய்யலாம்.
மேலே கூறியிருக்கும் இணையத்திற்கு சென்று உங்களின் அலைபேசி எண், டிக்கெட் ஐ.டி. ரெஃப்ரென்ஸ் எண் ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்து உள்ளே நுழைந்து பிறகு தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்