யூடியூப் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாமல் படிங்க!

யூடியூபில் வீடியோக்களுக்கு இடையே காட்டப்படும் விளம்பரங்கள் மூலம்தான் வருமானம் ஈட்டுகிறது. நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அல்லது சேவைகளை விளம்பரப்படுத்த யூடியூப்பிற்குப் பணம் செலுத்துகின்றன.

யூடியூபில் வீடியோக்களுக்கு இடையே காட்டப்படும் விளம்பரங்கள் மூலம்தான் வருமானம் ஈட்டுகிறது. நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அல்லது சேவைகளை விளம்பரப்படுத்த யூடியூப்பிற்குப் பணம் செலுத்துகின்றன.

author-image
WebDesk
New Update
Youtube

யூடியூப் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாமல் படிங்க!

இணைய உலகில் யூடியூப் பொழுதுபோக்கு தளமாக மட்டுமின்றி, பல மில்லியன் மக்களின் வாழ்வாதாரமாகவும் மாறியுள்ளது. இந்தியா முதல் அமெரிக்கா வரை, யூடியூப் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் கண்டெண்ட் கிரியேட்டர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். ஆனால், இந்த தளத்தின் உரிமையாளரான கூகுள் (Alphabet Inc.) ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? 

Advertisment

யூடியூபில் வீடியோக்களுக்கு இடையே காட்டப்படும் விளம்பரங்கள் மூலம்தான் வருமானம் ஈட்டுகிறது. நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அல்லது சேவைகளை விளம்பரப்படுத்த யூடியூப்பிற்குப் பணம் செலுத்துகின்றன, அந்த வருமானத்தில் ஒரு பகுதியை யூடியூப், வீடியோக்களை உருவாக்கிய கண்டெண்ட் கிரியேட்டர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. இதனால்தான் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே யூடியூப் மூலம் சம்பாதிக்க முடிகிறது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் இன்க் (Alphabet Inc.) ஒவ்வொரு காலாண்டுக்கும் அதன் வருமான அறிக்கையை வெளியிடுகிறது. 2024 ஆம் ஆண்டின் அறிக்கைகளின்படி, யூடியூப் ஒரு வருடத்தில் விளம்பரங்கள் மூலம் மட்டும் சுமார் 31 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி) ஈட்டியுள்ளது. இந்த தொகை, பிரீமியம் (YouTube Premium), யூடியூப் மியூசிக் (YouTube Music) போன்றவற்றிலிருந்து வரும் வருமானத்தை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடக அறிக்கைகளின்படி, யூடியூபின் தாய் நிறுவனமான கூகுள், யூடியூப் விளம்பரங்கள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 70 மில்லியன் டாலர்கள் வரை (ரூ. 415 முதல் 580 கோடி) வருமானம் ஈட்டுகிறது. சிறு மற்றும் பெரிய யூடியூபர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அதே நேரத்தில், இந்தத் தளம் அதன் உரிமையாளர்களுக்கு தினமும் பல நூறு கோடிகளைப் பெற்றுத் தருகிறது.

Advertisment
Advertisements

யூடியூப் ஈட்டும் வருமானத்தின் ஒருபெரிய பகுதி படைப்பாளிகளுக்குச் செல்கிறது. பொதுவாக, யூடியூப் விளம்பர வருமானத்தில் சுமார் 55% படைப்பாளிகளுக்கும், மீதமுள்ள 45% யூடியூபிற்கும் சொந்தமாகிறது. இதனால்தான் இந்தியா, அமெரிக்கா, பிற நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் யூடியூபர்களாகி தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறார்கள்.

யூடியூபின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா வளர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான மக்கள் யூடியூபில் வீடியோக்களைப் பார்க்கிறார்கள். இசை, கேமிங், வ்ளாக்கிங் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்திய யூடியூபர்கள் உலகிலேயே முன்னணி படைப்பாளிகளில் சிலர். யூடியூப் பொழுதுபோக்கு, கற்றலின் வழியை மாற்றியமைத்ததோடு மட்டுமின்றி, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. 

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: