இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதங்களை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.
இதனால், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் மாத தவணைக்கள் (இஎம்ஐ), மொத்த ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முன்னதாக, உயரும் பணவீக்கத்தை சமாளிக்க ரெப்போ விகிதம் 5.9 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதையடுத்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. இதனால் . வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் வாகனக் கடன்களின் EMIகள் உயரும்.
வீட்டுக் கடன்கள்
அந்த வகையில், 8.40 சதவீத வீதத்தில் ரூ. 1 லட்சம் வீட்டுக் கடன் பெறப்பட்டால், ஹெச்டிஎஃப்சி வீட்டுக் கடன் கால்குலேட்டரின் படி, 20 ஆண்டுகளுக்கு ரூ. 1 லட்சத்துக்கு மாதத் தவணை அல்லது இஎம்ஐ ரூ. 862 ஆக இருக்கும்.
தனிநபர் கடன்
இதேபோல், ஒரு வாடிக்கையாளர் 10.65 சதவீத வட்டி விகிதத்தில் வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் (என்பிஎஃப்சி) இருந்து 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் தனிநபர் கடனாகப் பெற்றிருந்தால், முன்பு ஒரு லட்சத்துக்கு ரூ.2,157 ஆக இருந்த இஎம்ஐ இப்போது ரூ.2174 ஆகும்.
கார் கடன்
ஒரு வாடிக்கையாளர் ரூ. 1 லட்சம் கார் கடனைப் பெற்றிருந்தால், எஸ்பிஐ கடன் கால்குலேட்டரின்படி அதே ஈஎம்ஐ 5 ஆண்டுகளுக்கு 8.40 சதவீதம் என்ற விகிதத்தில் ரூ.2047 ஆக இருக்கும். இருப்பினும், இன்று ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு அறிவிப்புக்கு பிறகு ஒரு லட்சத்திற்கு இந்த இஎம்ஐ ரூ.1 லட்சத்திற்கு ரூ.2064 ஆக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/