ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? இது தெரியலனா ரெய்டு கன்ஃபார்ம்!

ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பான வரம்பு 1990களில் நீக்கப்பட்டது. எனினும் வருமான வரித்துறை சோதனையை கருத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை 1994ல் வெளியிடப்பட்டது.

ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பான வரம்பு 1990களில் நீக்கப்பட்டது. எனினும் வருமான வரித்துறை சோதனையை கருத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை 1994ல் வெளியிடப்பட்டது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 27 September 2024 CHENNAI in Tamil

ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பான சுற்றறிக்கை 1994 இல் வெளியிடப்பட்டது.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Gold | இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் தங்கத்திற்கு மிகுந்த மரியாதை கொடுக்கப்படுகிறது. தங்கம் செழிப்பின் சின்னமாக பார்க்கப்படுகிறது.
நகைகளைத் தவிர, இது ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாகும். இந்த நிலையில், வீட்டில் தங்கம் வைப்பதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா என்ற கேள்வி தற்போது அதிகம் எழுந்துளளது.

வரம்பு உண்டா?

Advertisment

இதற்கு எளிய பதில் இல்லை, வீட்டில் தங்கம் வைக்க அரசு எந்த வரம்பும் விதிக்கவில்லை. இந்தச் சோதனையின் போது வீட்டில் இருந்த நகைகள் உள்ளிட்ட அனைத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் செல்வது வழக்கம்.
பலமுறை பெண்கள் அணிந்திருந்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு, வருமான வரி செலுத்துவோருக்கும், வரித்துறையினருக்கும் இடையே பிரச்னைகள் உருவானது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கையில் எந்த ஒரு சோதனையிலும் தங்கம் ஒரு வரம்பு வரை கைப்பற்றப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், திருமணமான பெண் 500 கிராம் தங்கத்தையும், திருமணமாகாத பெண் 250 கிராம் தங்கத்தையும், ஒரு ஆணிடம் 100 கிராம் தங்கத்தையும் வைத்திருக்க முடியும்.
சோதனையின் போது அவ்வளவு தங்கம் உள்ள ஆவணங்கள் இல்லையென்றாலும், அவற்றை பறிமுதல் செய்ய முடியாது. இது நகைகளைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும்.தங்க பிஸ்கட் மற்றும் செங்கல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கடந்த காலத்தில் வரம்பு

Advertisment
Advertisements

தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1968 இன் கீழ், வீட்டில் தங்கம் வைத்திருப்பதற்கு வரம்பு விதிக்கப்பட்டது. ஆனால் அது 1990 இல் ரத்து செய்யப்பட்டது. 1994 ஆம் ஆண்டில், சி.பி.டி.டி தனது அதிகாரிகளுக்கு மேலே குறிப்பிட்ட வரம்பு வரை தங்க நகைகளை பறிமுதல் செய்யக்கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட்டது.

வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இடையே நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வருமான வரி செலுத்துவோர் விசாரணையின் போது துறையின் முன் ஆஜராகுமாறு கூறும்போது, இவ்வளவு தங்கம் தொடர்பான சரியான ஆவணங்களைக் காட்ட வேண்டும்.

பரம்பரை தங்கம் 

ஒருவருக்கு தாத்தா பாட்டி அல்லது மூதாதையர்களிடமிருந்து தங்க நகைகள் மரபுரிமையாக இருந்தால் அதே விதி பொருந்தும். அவருடைய ஆவணங்களைக் காட்ட வேண்டும். இந்த நகைகள் தங்கள் மூதாதையர்களுடையது என்பதற்கான ஆதாரத்தை அவர்கள் அளிக்க வேண்டும்.

ஆவணங்கள் சரியாக இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படாது. அப்படி இல்லை என்றால் அந்த தங்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு செல்லலாம். சரியான ஆவணங்களுடன் அவர்களை பின்னர் விடுவிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: