scorecardresearch

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?

ஒரு தனிநபர் வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்துக் கொள்ளலாம்? இது தொடர்பாக அரசின் விதி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

How Much Gold You Can Keep At Home
இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம் பசுமையான முதலீடாக உள்ளது.

இந்தியர்கள் மட்டுமின்றி அனைவராலும் விரும்பப்படும் ஓர் மஞ்சள் உலோகம் தங்கம். இந்தத் தங்கம் நாளுக்கு நாள் விஷம் போல் விலை உயர்வை சந்தித்து வருகிறது.

எனினும் சிறுக சிறுக சேர்த்தாவது தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றெடுத்தவர்கள் தங்கத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்திவருகின்றனர்.

மேலும், இந்த தங்கத்தை விவசாயம், வீட்டு சேமிப்பு அல்லது சட்டப்பூர்வமாக மரபுரிமை போன்ற சொத்துக்கள் மூலமாக வாங்கினால் வரி விதிக்கப்படாது.
இதுமட்டுமின்றி இந்த வருமானத்தின் மூலம் அளவற்ற தங்கத்தை வாங்கிக் கொள்ளவும் நமது சட்டத்தில் இடமுண்டு.

பசுமையான முதலீடு

தங்கத்தை பொறுத்தவரை பண்டிகை காலங்கள், விழா நாள்களில் இந்தியர்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் இது பசுமையான முதலீடாக உள்ளது.

அதுமட்டுமின்றி இந்தத் தங்கம் அவசர பணத் தேவைகளுக்கும் கைகொடுக்கிறது.
இந்த நிலையில், தற்போது நாம் ஒரு தனி நபர் வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாக பார்ப்போம்.

அளவு

பொதுவாக ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் அல்லது நகைகளை சேமிக்கலாம் என்பதற்கு வரம்பு உள்ளது. அந்த வகையில், திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்.
எனினும், திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும்.

ரெய்டு

மேலே பரிந்துரைக்கப்பட்ட தங்கத்தை விட அதிக தங்கத்தை வைத்துக் கொண்டால், ஏதேனும் ரெய்டு நடந்தால் அந்தத் தங்கம் பறிமுதல் செய்யப்படும்.
2022 ஆம் ஆண்டில், இந்தி 31.25 டன் தங்கம் கொள்முதல் செய்து நான்காவது இடத்தைப் பிடித்தது என்று உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: How much gold you can keep at home

Best of Express