முதலீட்டாளர்கள் பலரும் தங்களின் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் (FDs) முதலீடு செய்கிறார்கள். வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மூத்த குடிமக்களுக்கு பொது குடிமக்களுக்கு வழங்குவதை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், ஃபிக்ஸட் டெபாசிட்களில் அதிக பணத்தை முதலீடு செய்ய அவர்கள் ஊக்குவிக்க விரும்புகிறார்கள்.
இந்த நிலையில், எஸ்.பி.ஐ மூத்த குடிமக்களுக்கு நீட்டிக்கப்பட்ட வட்டி விகித நன்மைகளுடன் எஃப்டிகளையும் வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கான எஸ்.பி.ஐ எஃப்.டி-களின் வட்டி விகிதங்கள் 1 வருட எஃப்.டியில் 7.30%, 3 வருட எஃப்.டியில் 7.25% மற்றும் 5 வருட எஃப்.டியில் 7.50% வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
அந்த வகையில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பதை இதில் பார்க்கலாம்.
1 ஆண்டு டெபாசிட்
எஸ்.பி.ஐ 1 வருட கால மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதத்தில் ஒருவர் ரூ. 3,00,000 முதலீடு செய்தால், அவர்களுக்கு ரூ.22,507 வட்டி கிடைக்கும்.
3 ஆண்டு எஃப்.டி
SBI மூத்த குடிமகன் 3 ஆண்டு FD க்கு வட்டி விகிதம் 7.25% ஆகும். ஒரு முதலீட்டாளர் திட்டத்தில் ரூ. 300,000 முதலீடு செய்தால், அவர்களுக்கு ஈடாக ரூ.72,164 கிடைக்கும்.
5 ஆண்டு எஃப்.டி
SBI மூத்த குடிமகன் 3 ஆண்டு FD க்கு வட்டி விகிதம் 7.25% ஆகும். ஒரு முதலீட்டாளர் திட்டத்தில் ரூ. 300,000 முதலீடு செய்தால், அதற்கு ஈடாக ரூ.72,164 கிடைக்கும்.
எஸ்.பி.ஐ மூத்தக் குடிமக்கள் 5 ஆண்டு டெபாசிட்
5 வருட SBI மூத்த குடிமக்கள் FD 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. FD இல் ரூ 300,000 முதலீடு செய்தால் ரூ 1,34,984 வட்டி கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“